வெள்ளநிவாரணத்திலும் விளம்பரம் தேவையா விஜய்... தரமான பதிலடி கொடுத்த இயக்கத்தினர். வீடியோ வைரல்.

Vijay makkal iyakkam video

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் பல உதவிகள் செய்து வருகின்றனர். எல்லாருடைய பாராட்டும் அவர்களுக்கு கிடைத்துள்ளது. ஆனால் இன்று ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆனது கொஞ்சம் நெகட்டிவா. அதாவது சாப்பாடு போடும்போது ஒருவர் விஜய் புகைப்படத்தை கையில் வைத்தவாறு வருவார். அதனால் பலர் முகம் சுளித்துள்ளனர் எதற்கு இந்த விளம்பரம் என்று.

அதற்கு அவர்களின் விளக்கம்: சகோதரரே இயக்கத்தின் கொடியும் தளபதி முகமும் மக்களுக்கு சென்றடையவும் இதை பார்க்கும் மற்ற ரசிகர்களும் உதவிகள் செய்ய முன்வருவார்கள் என்ற நோக்கத்தில் தான் பயன்படுத்தப்பட்டதே தவிர எங்கள் சுய விளம்பரத்துக்கு அல்ல.

மேலும் மக்கள் பணத்தில் கடமை செய்பவர்களே தங்கள் முகங்களை போட்டுக்கொள்ளும் பொது சொந்த பணத்தில் தளபதி பெயரில் உதவிடும் நாங்கள் புகைப்படம் பயன்படுத்துவதை மக்கள் எந்த நிலையிலும் தவறாக நினைக்கவில்லை! நீங்களே இது போல ஒரு பிம்பத்தை கட்டமைத்துவிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Vijay makkal iyakkam video

நம்முடைய கருத்து: இன்றைய அரசியலில் 1000 நிறை இருந்தாலும் 1 சிறிய குறை பெரிது படுத்தப்படும்…

“தேவையான விமர்சனமும், தேவையில்லாத எதிர்ப்பும் தான் நம்பள முன்னேறி ஓட வைக்கும்”னு உங்கள் தளபதி சொன்ன மாதிரி

நான் சொன்னத தேவையான விமர்சனமா மட்டும் எடுத்துகோங்க.. இந்த மாதிரி விமர்சனங்கள் நாளை நீங்க அரசியல் களம் காணும் போது இன்னும் நேர்தியாக இருக்க உதவும்.. மத்தபடி இந்த மழைல மட்டும் இல்ல மத்த எல்லாம் நேரத்துலயும் உங்கள் பணி சரியான பாதைல போகுது… வாழ்த்துக்கள் 👍

உங்கள் கருத்தை பதிவிடவும்.

Video:

Related Posts

View all