என்ன மீண்டும் விஜய் நம்பர் 1? அப்போ அஜித்து? இந்திய அளவில் மாஸ் காட்டும் தமிழ் நடிகர்கள். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Vijay number 1 ajith number 2

Ormax என்ற நிறுவனம் இருக்கிறது. அந்த நிறுவனத்தின் வேலையே மாதா மாதம் எந்த நடிகர் முதலிடத்தில் இருக்கிறார் என்று ஆய்வு செய்வது தான் வேலை. அனைவருக்குமே தெரியும், தமிழ் சினிமா ரசிகர்கள் போல் இணையதளத்தில் activeஆக இருக்கும் ரசிகர்களை காணவே முடியாது. அதுவும் ட்விட்டரில் தான் பலபேர் குடியிருக்கின்றனர். எல்லா நடிகர் ரசிகர்களும் active ஆக இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது.

ஆக்ட்டிவ்வா இருக்காங்க ஆனால் விஜய்-அஜித் ரசிகர்கள் போன்று இல்லை. இருவரும் தினம் மாறி மாறி சண்டைபோட்டுகொள்ளவங்க யார் பெரிய ஆள் என்று. வடிவேலு வசனம் ஒன்று வரும், யார் பெரிய ஆளு என்று அடிச்சு காட்டுங்கடா என்று, அதுபோல் தான் இரண்டு தரப்பு ரசிகர்களும் தினம் தினம் அடித்து காட்டிக்கொண்டிருக்கின்றனர். மாஸ் காட்டிக்கொண்டிருக்கின்றனர். இதில் யாராவது பிரபலங்கள் தூண்டி வேற விடுறாங்க.

Vijay number 1 ajith number 2

தற்போது அந்த Ormax கணிப்பின்படி இந்த நவம்பர் மாதம் முதலிடத்தில் இருப்பது தளபதி விஜய் தான். அந்த இரண்டாவது இடத்தில இருந்து 10வது இடம் வரை மாறுமே தவிர அந்த நம்பர் 1 இடம் மட்டும் கடைசி இரண்டு வருடங்களாக மாறவில்லை. அஜித்தின் துணிவு படமும் அடுத்த மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் கொஞ்சம் ஆக்ட்டிவ்வா இருக்கின்றனர் அதனால் தான் இந்த முறை அஜித் இரண்டாவது இடத்தில இருக்கிறார்.

மேலும் நாட்கள் நெருங்க நெருங்க விஜய் அஜித் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே இணையத்தில் ஒருவிதமான புத்தரிசி இருக்கும். யார் ஜெயிக்க போகிறார்கள் என்று. எங்களை பொறுத்தவரை இரண்டு படமுமே நன்றாக இருந்தால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. அது தான் எண்களின் வேண்டுதல். இவர்கள் இருவரால் தான் இப்போது தமிழ் சினிமா ஓரளவுக்கு முன்னிற்கிறது. மூத்த நடிகர்களான இவர்கள் இருவருமே ஜெயிக்க வேண்டும்.

Proof:

Related Posts

View all