மனுஷன் கோவில் கட்டி கொடுத்திருக்காரு. தளபதி விஜய் பனையூர் இல்லத்தில் ரசிகர்களை மீட் செய்தார். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vijay panaiyur office fans meet video

சென்னை நீலாங்கரையில் உள்ள பனையூர் இல்லத்திற்கு ரசிகர்களுடன் ஆலோசனை நடத்த நடிகர் விஜய் வருகை. விஜய் வருகையையொட்டி விழாக்கோலம் போல ஆரவாரம் செய்து ரசிகர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் வரவேற்பு. நீண்ட நாள் கழிச்சு ரசிகர்களை சந்திப்பதால் அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த விஜய். அந்த வீடியோ இணையத்தில் வைரல்.

வாரிசு படம் ஆந்திர மாநிலத்தில் வெளியாகுமா ஆகாதா என்ற சர்ச்சை வெளியான நிலையில், பல அரசியல் தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். ஆன்லைனில் ரசிகர்கள் குழம்பி போய் இருக்கும் மனநிலையில், இன்று விஜயின் இந்த வருகை அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனதை முன்னிட்டு கொஞ்சம் இவங்களுக்கு புத்துணர்ச்சி கிடைத்திருக்கும். இனி இரண்டு மதத்திற்கு விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

Vijay panaiyur office fans meet video

கிலிம்ப்ஸ்:

  • 5 ஆண்டுகளுக்கு பின் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் நடிகர் விஜய்
  • பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் ரசிகர்களை சந்திக்கிறார் விஜய்
  • விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் குவிந்து வரும் ரசிகர்கள்

விஜய் எங்கள் கிராமத்திற்கு பெருமாள் கோவில் கட்டி கொடுத்துள்ளார். அவர் பட பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கிறோம். சிவகூடல் கிராம ரசிகர் நெகிழ்ச்சி. இதை பாஜகவினர் கண்ணில் படும்படி ஷேர் செய்யுமாறு விஜய் ரசிகர்கள் இணையத்தில் விடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். காரணம் மதத்தை வைத்து அரசியல் செய்த சிலருக்கு இது சவுக்கடியாக இருக்கும் என்பதற்காகவே.

Video:

Related Posts

View all