'தல' பேர் சொன்னவுடனே கத்திய மாணவர்கள்.. "தேவை இல்லாம கத்தாதீங்க.." என்று செம்ம கடுப்பான விஜய் சேதுபதி.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vijay sethupathi angry video viral

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்போ படங்களில் எவ்வளவு பிஸி என்று நமக்கு தெரியும், அப்படி இருந்தும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி காலேஜ்ல கூப்பிட்டிருக்காங்க என்று சொல்லி அங்க போய் இருக்காரு. போன அவருக்கு அங்கு மாணவர்கள் நீங்க எதாவது ஸ்பீச் கொடுத்தா நல்லா இருக்கும் என்று கேட்க, அவர் அவரோட உரையை தொடங்கி இருக்காரு.

அப்போது ஒரு விஷயத்தில் பசங்களுக்கு மேற்கோள் காட்டி பேச ஒரு திருக்குறளை பயன்படுத்திருக்காரு. அந்த திருக்குறள்: “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை” என்பது தான் அந்த குறள். அதில் ‘தலை’ என்ற வார்த்தை சொன்னதுமே மாணவர்கள் கத்தி கூச்சலிட ஆரம்பிச்சுட்டாங்க. அதில் செம்ம கடுப்பாகிட்டாரு விஜய் சேதுபதி. “இப்போ எதுக்கு கத்துறீங்க தேவை இல்லாம, என்ன பேசிட்டு இருக்கோம்.. அட போங்கப்பா” என்று கொஞ்சம் காண்டு ஆகிட்டாரு பசங்க மேல. அந்த வீடியோ தான் இணையத்தில் செம்ம வைரல்.

இதே விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் கலந்துக்கிட்டாரு. அவர் கூடவும் உரையாடும் நிகழ்வு நடந்தது. சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படத்தை பற்றி கேப்பாங்க என்று நினைத்தால் எல்லாரும் அவரோட அடுத்த படமான தளபதி விஜய்யை வைத்து இயக்கும் படம் “தளபதி 67” பற்றி கேட்டு மீண்டும் கத்த ஆரம்பிச்சுட்டாங்க.

பின்னர் கொஞ்சம் உஷாரான அவரு, இவ்வளவு நாள் பொறுமையா இருந்துட்டீங்க. இன்னும் கொஞ்ச நாள் தானே பொறுமையா இருங்க கண்டிப்பா ஒர்த் தி வைட்டா இருக்கும் என்று கூறி கொஞ்சம் திருப்தி பண்ணிருக்கார். அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்.

Video:

Related Posts

View all