ஹீரோயின் புல்லட்-ல மாஸ் காட்றாங்க. விஜய் சேதுபதி பாவம் டான்ஸ் ஆடாம.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
என்னைப் போலவே விஜய்சேதுபதி சினிமா நேசர். நான் மார்லன் பிராண்டோ முன்பு மண்டியிட்டு அவரது கையில் ஏன் முத்தமிடுவேன். அப்படித்தான் இன்று விஜய்சேதுபதி என் முன் மண்டியிட்டார். நாளை விஜய் சேதுபதி முன்பு மண்டியிட வேறொரு கலைஞன் வருவான் என்று எவ்வளவு பெரிய வார்த்தையை சொல்லிவிட்டார். கமல் இப்படி இதற்கு முன் வேறொரு நடிகரை பாராட்டி பார்த்ததேயில்லை. ரொம்ப கிளோஸ் ஆகிட்டாங்க போல இரண்டு பேரும்.
இசை நம்மைப் பக்குவப்படுத்துது. சாந்தமாக்குது. நல்ல இசையைக் கேட்டால் புதுசாக வாழ்க்கையை அணுக முடியும்னு தோணுது என்று சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த போது விஜய் சேதுபதி சொன்னார். அவர் சொன்னது போலவே அவருக்கு DSP படத்தில் இமான் நல்ல நல்ல பாடல்களை கொடுத்துள்ளார். அறிமுக நாயகி அனுகீர்த்தி செம்ம அழகா இருக்காங்க. இவங்க இன்னும் நிறைய படங்களில் கமிட் அவங்க. இதுவொரு நல்ல தொடக்கம்.
விஜய் சேதுபதி நடிக்கிற DSP படத்தை தயாரிக்கிறது கார்த்திக் சுப்புராஜ்-ன் Stone Bench productions. கடந்த வாரம் #DSP இசை வெளியீட்டு விழாவுக்கு #KamalHaasan 𓃵 அழைக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனையில் இருந்து அப்படியே சென்றார். தன் ரசிகனாலேயே விழாவுக்கு அழைக்கப் படாமல் ஒதுக்கி ஓரங்கட்டாரா #RajiniKanth. காலம் தான் எவ்வளவு கொடியது என்று ரஜினி ரசிகர்கள் கருத்து. இன்னும் இந்த சண்டை எல்லாம் நடக்கிறது என்பதை கேட்டால் கொஞ்சம் காமெடியா தான் இருக்கு.
தற்போது இந்த அன்னபூரணி பாடல் வெளியாகியுள்ளது. ஒரு மாதிரி ஜாலியா துள்ளலா இருக்கு. விஜய் சேதுபதி நடனம் ஆடுங்கள் என்று கஷ்டப்படுத்தாமல் அவரை அந்த பீட்டுக்கு ரியாக்ட் மட்டும் பண்ண வெச்சிருக்காங்க. அதுவும் ஒருமாதிரி நல்லா தான் இருக்கு.
Video: