எனக்கும் கிஸ் கொடு என்று கேட்டு வாங்கிய தளபதி.. மாஸ்டர் unseen வீடியோ ரிலீஸ் ஆகிருச்சு.

Vijay sethupathi kiss vijay

2021ம் ஆண்டு கொரோனா எல்லாம் முடிந்த பிறகு வந்த படம் மாஸ்டர். தளபதி விஜய், விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த படம் அது. 50 சதவீதம் ரசிகர்கள் தான் ஒரு ஷோ பார்க்க வேண்டும் என்று அறிவிப்பு வந்தாலும் அந்த படம் தான் அந்த வருடத்தின் டாப் வசூல் செய்த படமாக அமைந்தது. மேலும் அந்த படம் ஒரு mixed விமர்சனங்கள் தான் பெற்றது.

அந்த படத்தில் விஜய் - விஜய் சேதுபதி இருவருமே ஒரு மாதிரி மிரட்டி இருந்தனர். பெஸ்ட் வில்லன் என்று எடுத்தால் விஜய் சேதுபதி நடித்த அந்த பவானி கதாபாத்திரம் தான் பல பேருக்கு நினைவுக்கு வரும் அதேபோல் விஜய் ரசிகர்களின் மிகவும் க்ளோஸ் டு ஹார்ட் கதாபத்திரம் என்றால் JD தான். நீண்ட நாள் களைத்து ஒரு போதை ஆசாமியா நடிச்சிருந்தாரு.

Vijay sethupathi kiss vijay

அப்போது அந்த படத்தின் படப்பிடிப்பின் போது, பல சுவாரசிய சம்பவங்கள் நடந்தது. அதில் ஒரு சம்பவம் ஆர்ட் இயக்குனர் சதீஷ் அவர்களின் பிறந்தநாள், அப்போது தான் விஜய் - விஜய் சேதுபதி கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடத்தி வந்த தருணம். விஜய் சேதுபதி எப்போவும் முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவிப்பர். அதைப்பார்த்து க்யூட்டாக விஜய் செய்த காரியம்.

விஜய் எனக்கும் குடு யா என்று செல்லமாக கேட்க, விஜய் சேதுபதி கிஸ் கொடுத்தவுடன் அன்பாக கட்டி அணைக்கிறார், அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. நேற்று அந்த ஆர்ட் இயக்குனரே தான் அந்த விடியோவை பதிவிட்டிருக்கிறார். நீண்ட நாள் இந்த வீடியோக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க, இப்போ இது வைரல்.

Video:

Related Posts

View all