இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.. விஜய் பையன் இயக்குனர் விக்ரம் பையன்...? போட்டோ வைரல்..

Vijay son jason sanjay director

இன்னைக்கு தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நிகழ்வு ஒன்னு நடந்திருக்கு, அது என்னவென்றால் தளபதி விஜயின் பையன் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்காரு. அந்த படத்தை தயாரிப்பது லைக்கா நிறுவனம். இன்று எல்லாரும் விடா முயற்சி அப்டேட் வருமென்று நினைச்சுட்டு இருந்தாங்க ஆனால் விஜய் ரசிகர்களுக்கு அப்டேட் வந்திருக்கு.

எப்பவும் போல அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதுவும் அந்த அறிவிப்பே ஒரு ஸ்டைலா பண்ணாங்க. லயன் கிங் படத்தில், சிங்கம் முபாசா கால்தடத்தில் அந்த குட்டி சிங்கம் கால் வைக்கும் அல்லவா, அது போல ஒரு GIF போட்டு அறிவிப்பு பண்ணாங்க. எல்லாரும் அஜித் அல்லது ரஜினியை தான் குறிப்பிடுகின்றனர் என்று காத்திருந்தாங்க.

Vijay son jason sanjay director

அவுட் ஆப் சில்லபஸ் என்று சொல்லுவாங்கல, அப்படி ஒரு விருந்தாக வந்திருக்கு தளபதி ரசிகர்களுக்கு. சரி யார் இந்த படத்தில் ஹீரோவா நடிக்கப்போறாங்க என்று பயங்கர விவாதம் போயிட்டு இருக்கு. எல்லாரும் விக்ரம் பையன் துருவ் ஹீரோ, அஜித் மகள் அனோஷ்கா ஹீரோயின், ரகுமான் மகம் அமீன் தான் இசை என்று இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்காங்க.

எப்போ ஷூட்டிங் தொடக்க போகிறது என்றெல்லாம் தெரியவில்லை ஆனால் கூடிய விரைவில் அறிவிப்பு வந்துவிடும். முன்னாடி SAC கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரல். அதாவது பேரனிடம் அவர் பேசும்போது சொல்லிருக்காரு என்னோட முதல் ஹீரோ விஜய் சேதுபதி தான் என்று. ஆனால் வருடத்திற்கு விஜய் சேதுபதி பிசி என்று சொல்லுறாங்க. பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு.

Fans Update:

Related Posts

View all