விஜய் இருக்காரே அவரு.. நடக்கணும் இருந்தா கண்டிப்பா நடக்கும். மனம் திறந்த பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான். முழு விவரம்.
தளபதி விஜயும், ஷாருக் காணும் இப்போ நேருகின்யா நண்பர்கள் ஆகிட்டாங்க. அட்லீ பிறந்தநாள் அன்று நைட் புல்லா பார்ட்டியாம். ரெண்டு பேரும் நிறைய நேரம் பிரைவேட்டா பேசி ஜாலியா பன் பண்ணிருக்காங்க. சினிமாவை பொறுத்தவரை நண்பர்களை சம்பாதிப்பது தான் கஷ்டம், ஏனென்றால் கூட இருக்கவனே குழி பறிச்சுட்டு போயிட்டே இருப்பான், அந்த நிலையில் இருக்கிறது சினிமா. ஏனென்றால் ஒருத்தன் வளர இன்னோருத்தனை தள்ளிவிட கூட இந்த காலத்தில் யாரும் தயங்கமாட்டாங்க.
இந்த நிலையில் இவங்க ரெண்டு பேரும் நட்பு பாராட்டுகிறது பார்ப்பதற்கு நமக்கு சந்தோசமா இருக்கு. அட்லீ இயக்கத்தில் ஷாருக் நடிக்கும் ஜவான் படம் அடுத்த வருடம் சம்மர்க்கு ரெடி ஆகிட்டு இருக்கு. படத்தின் முக்கியமான portions சென்னையில் தான் அதுவும் ஒரு மாதமாக நடந்து வந்தது. இந்த டீசர் announcement வீடியோவே அட்லீ சும்மா மிரட்டிவிட்டிருந்தார். இந்த படம் தமிழும் ரிலீஸ் ஆவதால் இந்த படத்துக்கான ஹைப் இன்னும் வேற ரகத்தில் இருக்கிறது.
ஷாருக் கான் அவருடைய பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். அப்போது ஏகப்பட்ட ரசிகர்கள் அவர் வீடு முன்னாடி குவிந்து ஆர்ப்பரித்தனர். வந்த சில ரசிகர்களுக்கு கிப்ட்டாக ஸ்மார்ட் வாட்ச் எல்லாம் கொடுத்தாரு ஷாருக். நேற்று அவருக்கு கொஞ்சம் டைம் கிடைச்சிருக்கு போல, அதனால் ரசிகர்களிடம் பேசலாம் என்று எண்ணி ட்விட்டரில் பேசிருக்காரு. அப்போது நம்ம பசங்க சும்மா இருப்பாங்களா. எப்போ சார் நீங்களும், விஜயும் சேர்ந்து படம் பண்ண போறீங்க, அவரு ஆள் எப்படி என்ற கேள்விக்கு பதில் சொல்லிருக்காரு ஷாருக்.
“விஜய் வந்து ரொம்ப கூலான மனிதரும். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிப்பது நடக்கணும்ன்னு இருந்தா கண்டிப்பா நடக்கும் என்று சொல்லிருக்காரு.” கண்டிப்பா நடக்கணும் இது தான் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கும். படம் பேன் வேர்ல்ட் படமாக கொண்டாடப்படும் என்பதில் சந்தேகமில்லை.
Tweet:
He is really cool guy…films happen when they happen so…if they have to they will. https://t.co/me3xGJmZoC
— Shah Rukh Khan (@iamsrk) November 5, 2022