என்னடா புதுசா சொல்றீங்க.. உண்மை என்றால் 1000 கோடி வசூல் உறுதி. முழு விவரம்.

Vijay srk to come together

நடிகர் ஷாருக் கான் நடிச்ச பதான் படம் ரிலீஸ் ஆகியிருக்கு கொஞ்ச நாள் முன்னாடி, இந்த படம் தான் பாலிவுட் சரிதரத்தில் கொஞ்ச நாளில் 500 கோடி வசூல் செய்த படம். அடுத்து ஷாருக் கான் படம் என்ன ரிலீஸ் ஆகும் என்று அனைவரும் வைட்டிங், அடுத்து அட்லீ படம் ஜவான். கண்டிப்பா அதுவும் பாக்ஸ் ஆபிசில் சம்பவம் செய்யும்.

அதேபோல தான் தளபதி விஜய் தற்போது நடித்து வெளிவந்த வாரிசு படம் 300 கோடியை கடந்திருந்தது. இது பான் இந்தியா படம் கூட இல்ல ஆனாலும் 300 கோடி வசூல் எல்லாம் வேற ரகம் என்று தான் சொல்லணும். அம்மா எப்போ இது தளபதி விஜய் பற்றி பேசுறீங்க, ஷாருக் கான் பற்றி பேசுறீங்க என்று தானே பாக்குறீங்க.

Vijay srk to come together

இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார் ராம்சரண் வைத்து RC15 படத்தை இயக்கிட்டு இருக்காரு. இந்த படத்தில் கடைசி schedule பயங்கர விறுவிறுப்பா நடந்துட்டு இருக்கு. அம்மா ஏன் இப்போ இயக்குனர் ஷங்கர் பற்றி பேசுறீங்க என்று தானே நினைக்கிறீங்க. அடுத்த பாராவை படிங்க தெரிஞ்சிடும்.

நேற்று இணையதளத்தில் ஒரு ரூமர் கிளப்பியிருக்கு, இவங்க இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ண போறாங்க. அந்த படத்தை இயக்கப்போவது இயக்குனர் ஷங்கர் என்று. 900 கோட் பொருட்செலவில் இந்த படம் உருவாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. தளபதி 69 அல்லது 70வது படமாக இது இருக்கும் என்றும் சொல்ல படுகிறது. நடந்தால் பெரிய சம்பவமா இருக்கும்.

Related Posts

View all