எனக்கு கல்யாணம்.. 6 வருட லவ்வு.. காதலியை கரம்பிடித்து விஜய் டிவி புகழ். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
விஜய் டிவி புகழ் பயங்கர திறமைசாலி, வேற லெவல் என்டேர்டைனர் என்பது நாம் அறிவோம். கடந்த ஒரு சில வருடங்களாகவே விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி செம்ம ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்றால் அதற்கு இவரோட காமெடி டைமிங் தான் காரணம்.
அசால்ட்டாக மூஞ்சில கொடுக்கிற expressions மூலமாகவே சிரிக்க வைத்து விடுவார்.
இவர் கடந்த 6 வருடங்களாக பென்சி என்ற பெண்ணை காதலித்து வருகிறார். இப்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். அந்த திருமணத்தின் பத்திரிக்கை தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
மேலும், கடந்த 2 -3 வருடங்களாக தான் புகழ் பயங்கர ட்ரெண்டிங். அதற்கு முன்னர் எல்லாம் அவரும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர் தான். ஆனால் அந்த காலகட்டத்தில் கூட அவரை விட்டு பிரியாமல் அவருக்கு துணையாக இன்று வரை நின்று வந்த பென்சிக்கு வாழ்த்துக்கள்.