எனக்கு என்ன போதை னா.. வாரிசு இசை வெளியீட்டு விழாவில், தளபதி விஜய் செய்த சம்பவங்கள். முழு விவரம்.
இதுவாரை விஜய் படங்களுக்கு நடந்த இசை வெளியீட்டு விழாவிலே வாரிசு படகின் இசை வெளியீட்டு விழா தான் GOAT என்று விஜய் ரசிகர்கள் சொல்கின்றனர். விஜயின் என்ட்ரியில் இருந்து கடைசி வரை சைலெண்டா மாஸ் கட்டிட்டு இருந்த அவரு, கடைசியில் ஸ்பீச் தரும்போது அவ்வளவு எனர்ஜி. ஒரு சிலருக்கு மட்டும் தான் யார் என்ன பண்ணினாலும் மேடையை தனக்காக்கி கொள்ளும் ஒரு குவாலிட்டி இருக்கு, அது விஜயிடம் நிரையவே இருக்கிறது.
ஜானி மாஸ்டர் ஸ்பீச் ஆரம்பத்தில் ஆரம்பித்து அவர் தமிழில் நிறைய பேர் கூட ஒர்க் பண்ணினாலும் விஜய் தான் பேவரைட் ஆம். பின்னர் இசையமைப்பிலார் தமன் ரொம்ப எமோஷனல் ஆயிட்டாரு. ஏனென்றால் சென்னையில் பிறந்து வளர்ந்த பையன் விஜய் படத்துக்கு இசையமைக்காமல் போயிருந்தால் என் வாழ்கை நிறைவு பெற்றிருக்காது என்று குறிப்பிட்டிருந்தார். கண்ணும் கலங்கிட்டாரு. அடுத்து வந்த சம்யுக்தா, ரஷ்மிக்கா எல்லாரும் அந்த பேன் கேர்ள் மொமெண்ட்ஸ் சூப்பரா பேசுனாங்க.
நீண்ட நாட்களுக்கு பின் பிரகாஷ்ராஜ் வேற விஜய் கூட நடிக்கிறார். இந்த படத்தில் அவரு தான் வில்லனாம். இவங்க இரண்டு பேர் காம்போ பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. மேலும் சரத்குமார் பேசும்போது சூரியவம்சம் வெற்றி விழாவிலேயே சொன்னேன் விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று, அதேபோல் விஜய் தான் தற்போதைய சூப்பர்ஸ்டார் என்று மிகவும் வெளிப்படையாக கூறியுள்ளார். இதனால் ஆன்லைனில் நிறைய ரசிகர்கள் கடும் வருத்தத்தில் இருக்கின்றனர்.
பின் தான் கடைசியில் விஜய் என்ட்ரி. ரொம்ப அரசியில் பேசவில்லை. ரசிகர்களுடன் ஜாலியா வைப் பண்ணிட்டு இருந்தாரு. உங்களுக்கு எது போதை என்று கேட்க, உடனே ரசிகர்களை கைகாட்டியது எல்லாம் தெய்வ லெவல். என் நெஞ்சில் குடியிருக்கும் என்று ட்வீட் பண்ணி விடுங்க என்று அவரே வீடியோ எடுத்து ஆன்லைன் ரசிகர்களுக்காக அவருடைய PRO ஜெகதீசை அழைத்து வீடியோ பதிவிட சொன்னது எல்லாம் செம்ம. இப்போ அந்த வீடியோ தான் ஐந்து மில்லியன்களை கடந்து போயிட்டு இருக்கு. ஆனால் இன்னும் ட்ரைலர்/டீசர் பற்றி எல்லாம் இன்னும் எதுவும் நேற்று அறிவிக்கல.
வீடியோ:
#EnNenjilKudiyirukkum pic.twitter.com/4rbooR4XLa
— Vijay (@actorvijay) December 24, 2022