காரணம் என்ன? இனி எங்களுக்கு விஜய் தேவையில்லை என்று ட்ரெண்ட் செய்த ரசிகர்கள். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நேற்று விஜயின் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை எண்ணூரில் நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், அங்கிருந்த ஒரு இடத்தில் ரசிகர்கள் அவரை பார்க்க வந்தனர். ஆனால் விஜயை பார்க்க முடியாததால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இன்னொரு விஷயம் என்னவென்றால் உண்மையாகவே அங்கு தான் படப்பிடிப்பு நடந்ததா என்று யாருக்கும் தெரியாது.
இதனால் தற்போது “விஜய் தேவையில்லை” என்ற ஹாஸ்டேக்கை சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இப்படி செய்து விஜய் ரசிகர்களை கடுப்பேற்றுவது அவங்களுக்கு ஒரு குஷி. இது அஜித்துக்கு நடந்திருந்தாலும் விஜய் ரசிகர்கள் இதைத்தான் செய்திருப்பார்கள். இவர்கள் பிரச்னைக்கு எல்லாம் முடிவு என்பதே கிடையாது.
இங்கு இளைஞர்கள் பல விஜய் ரசிகர்களாக தான் இருப்பர். அவர் அவரது தொழில் செய்கிறார்.. நீங்களும் உங்களுடைய தொழிலை முதலில் பாருங்கள். இதைத்தான் அவர் பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். முதலில் குடும்பத்தையும் தொழிலையும் கவனிங்க அதுக்கு அப்புறம் மத்தவரை நீங்கள் கவனிக்கலாம் என்று.
மேலும் ரசிகர்களாகிய நீங்க அவரு வேலையை முதலில் செய்ய விடுங்க, அவர பார்பதற்கு பத்து பேர் போனா ஆயிரம் பேர் வருவாங்க அவங்க இடத்துல நாம் இருந்தால்தான் அந்த வலி தெரியும். இதை புரியாதவன் தான் இப்படி பேட்டிகொடுத்துட்டு சுத்துவான்.
Video: