விஜய் சார்கிட்டெல்லாம் போகாதீங்க.. வாரிசு படப்பிடிப்பில் நடந்த அவமானம். கண்ணீர் விட்ட சின்னத்திரை நடிகர்.
2023 தமிழ் சினிமாவின் மிகப்பெரிய படம் வாரிசு. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, ஆந்திரா என்று பல இடங்களில் மாறி மாறி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மிக பிரமாண்ட பொருட்ச்செலவில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களும் நிறைய பேர்.
அந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரனை படக்குழு அணுகியுள்ளது. அவரும் டேட்ஸ் எல்லாம் ஒதுக்கி படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார்.
இவரை பார்த்த இயக்குனர் உதவி இயக்குனரிடம் எதோ சொல்ல, அந்த உதவி இயக்குனர் வந்து நீங்க கேரவனில் வெயிட் பண்ணுங்க என்று சொல்லி இருக்கிறார். பின்னர் இவரை ஆகிய மேனேஜரிடம் கூப்பிட்து கேட்டபொழுது தான் அதிர்ச்சி.
முகத்தை வைத்தே எதோ கமெண்ட் செய்திருப்பார் போல இயக்குனர் அல்லது அவர் எழுதிய கதாபாத்திரத்திற்கு இவர் சரியாக இருக்கமாட்டார் என்று கருதியிருப்பார் போல.
அதனால் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டனர். ஒரு சிலர் இது விஜய் சார் காரவனில் தான் இருக்கிறார் பொய் சொல்லுங்கள் என்று கூறியிருக்கின்றனர். ஆனால் அந்த மேனேஜரோ அய்யோ விஜய் சார் கிட்ட எல்லாம் சொல்லிடாதீங்க, பேசியபடி உங்களுக்கு இந்த ஒரு நாள் சம்பளம் வந்துவிடும் என்று கூறி இருக்கின்றனர்.
வீட்டில் கிளம்பும்போது குழந்தை மனைவிகளிடம் ஒரு குட் நியூஸ் இருக்குன்னு சொல்லிட்டு வந்திருக்கிறார் மனுஷன். அவர்கள் கும்பமே விஜய் ரசிகர்களும். அங்கு சென்ற இவருக்கு நடந்த சோகத்தை எண்ணி கண் கலக்கியுள்ளார்.