வாரிசு ஆடியோ ரிலீஸ்.. விஜய் பேனரை கொளுத்திய அஜித் ரசிகர்கள். லேடீஸ் போட்டோ வைரல்.
24 டிசம்பர் விஜய் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாளாக அமைந்தது. காரணம் நீண்ட நாள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. இப்படி ஒரு விழா எல்லாம் அஜித் ரசிகர்களுக்கு கனவு தான், ஆனால் ஏக்கம் கண்டிப்பா இருக்கும். ஆனால் அவரோ அடுத்த மாதம் படம் ரிலீஸ் ஜாலியாக பைக் ரைடில் இருக்காரு.
அது ரொம்ப பாரத வேண்டிய விஷயம். விஜய்க்கு இது பிடிச்சிருக்கு விழா நடத்துறார். அஜித்துக்கு பைக் தான் பிரியம். அதனால் தான் அவர் நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவருடைய நேரத்தை இப்படி செலவிடுகிறார். இருவருமே இரு துருவங்கள். வேறு வேறு பாதை. விஜய்க்கு அரசியல் ஆசை இருக்கிறது. அஜித்துக்கு குடும்பம், பைக்ஸ் தான். இதை நாம் ரெஸ்பெக்ட் பண்ண வேண்டும்.
அஜித் ரசிகர் ஒருவரே இப்போ இருக்கும் நடிகர்கள், அடுத்து அரசியலுக்கு வந்தால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்றால் அது விஜய்க்கு மட்டும் தான் என்று கூறியிருந்தார். நேற்று நடந்த விழா எல்லாம் அதுக்கு ஒரு ஒத்திகை என்று சொல்லலாம். இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை எல்லாரும் அவரை ரசிக்கிறாங்க. ஆனால் எப்போது அதிகாரபூர்வமாக வருவார் என்பது தெரியவில்லை.
நேற்று ஒரு பக்கம் வரிசை இசைவெளியீட்டு விழா நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அஜித் ரசிகர்களுக்காக சென்னை ரோகிணி திரையரங்கம் கொண்டாட ஒரு விழா arrange பண்ணாங்க. ரோகிணியில் அஜித்/விஜய் இருவரின் படங்களும் வெளியாகிறது. அப்போது கொண்டாட்டத்தில் இருந்த அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். போறபோக்கில் வாரிசு படத்தின் பெயரையும் கொளுத்தி விட்டு விட்டார்கள்.
இது இப்போது ஆன்லைனில் சர்ச்சை. ரோகிணி திரையரங்கு ஓனர் இந்த நிகழ்வை கண்டித்து ட்வீட் செய்துள்ளார். இதுபோன்று நடந்தால் நாங்கள் பேனர் வெக்கவே அனுமதிக்கமாட்டோம் என்று.
லேட்டஸ்ட் ட்வீட்:
What Is This @RohiniSilverScr ?? didn't They Pay For this Banner ! How Can u allow this ? Is this Right @NikileshSurya @rhevanth95 👀 #Varisu pic.twitter.com/aNEmDRYot4
— 𝙁𝙇𝘼𝙎𝙃⚡🇵🇹 (@Its_FlashVJ) December 24, 2022