வெற்றிமாறன் - தளபதி விஜய் காம்போ உறுதி.. உறுதி செய்த இயக்குனர். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vijay vetrimaran to work together

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காமெடி நடிகராக கலக்கி கொண்டிருந்த சூரி, முதல் முதலாக வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ளார். படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகிறது.

அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த இயக்குனர் தமிழ் (டாணாக்காரன் படத்தை இயக்கியவர்) பல நேர்காணல் கொடுத்து வருகிறார். நேற்று இணையதளம் முழிவதும் அவர் பேசிய ஒரு கன்டென்ட் தான் வைரல். அப்படி என்ன பேசியிருக்கிறார் என்று எடுத்து பார்த்தால் தளபதி விஜய் படம் குறித்து பேசியுள்ளார்.

Vijay vetrimaran to work together

அதுவும் அந்த படத்தை இயக்கப்போவது வெற்றிமாறனாம். ஏற்கனவே வெற்றிமாறன் ஒரு சின்ன clue கொடுத்திருந்தார். இப்படி ஒரு பெரிய படம் வாடிவாசலுக்கு அப்புறம் இருக்கிறது என்று. அதற்கு ஏற்றது போல இவர் சமீபத்தில் கொடுத்த காணொளி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. வெற்றிமாறன் விஜய் படம் நினைத்தாலே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சும்மா விஜய் கமர்ஷியலா ஒரு படம் பண்ணினாலே அது வேற மாதிரி ஓட்டம் இருக்கிறது. அவருடைய ஸ்டார்டம் அந்தளவுக்கு உயர்ந்துள்ளது. நீங்க வீனா பாருங்க கண்டிப்பா பொன்னியின் செல்வன் எப்படி 400 கோடிக்கு மேல் வசூலித்தது, இவங்க இரண்டு பேர் காம்போல படம் பண்ணினால் கண்டிப்பா வரும்.

Video:

Related Posts

View all