அடிச்சு காட்டுங்க டா.. வர்ற பொங்கலுக்கு தெரிஞ்சிடும் யாரு கெத்துன்னு.. ப்பா முரட்டு அப்டேட். முழு விவரம்.
இன்று கிடைத்த மிகப்பெரிய அப்டேட் என்னவென்றால் வரும் பொங்கல் 2023 அன்று வெளியாகும் படம் வாரிசும், துணிவும் தான். தற்போது சினிமாவின் முக்கியமான முதன்மையான நட்சத்திரங்கள் யார் என்றால் இவங்க ரெண்டு பேரும் தான். தளபதி விஜய் - தல அஜித் இவங்க ரெண்டு பேரும் இல்லையென்றால் தமிழ் சினிமால ஒரு excitement-ஏ இருக்காது. பல youtube சேனல்கள் இவர்கள் பெயரை சொல்லித்தான் வியாபாரமே பார்த்து கொண்டிருக்கின்றனர்.
தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படம், ஷூட்டிங் எப்போது தொடங்கியதோ அப்போதே சொல்லிட்டாங்க பொங்கல் ரிலீஸ் என்று. படத்தின் ஷூட்டிங்கும் இன்னும் சில நாட்களில் நிறைவடைந்துவிடும். தற்போது நமக்கு கிடைச்ச அப்டேட்படி படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங் ஒரு பக்கம், டப்பிங் ஒரு பக்கம்ன்னு வேலைகள் படு ஜோராக போயிட்டு இருக்கு. அதுமட்டுமில்லாமல் வரும் தீபாவளியன்று தளபதி பேன்ஸ்க்கு செம்ம surprise இருக்கு. வாரிசு படத்தின் முதல் சிங்கிள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை குறித்த அப்டேட் அடுத்த வாரத்தில் வந்துவிடும். தளபதி ரசிகர்கள் மஜா பண்ணுவாங்க.
அஜித் நடிக்கும் துணிவு படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது என்ற செய்தி தற்போது வலைத்தளங்களில் வந்த வண்ணம் இருக்கிறது. கடைசி கட்ட ஷூட்டிங் படக்குழு பேங்காக் சென்று சூட் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக செலவு செய்து எடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்த படத்தின் அப்டேட் எப்போ வருமென்று யாருக்கும் தெரியாது, ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் டக்குனு அப்டேட் வந்துவிடும். சமூக வலைத்தளம் விழாக்கோலம் தான். பண்டிகை போல கொண்டாடுவார்கள்.
தற்போது கிடைத்த அப்டேட்படி ஜனவரி 12ம் தேதி துணிவு படம் அதாவது அஜித்தின் வியாழக்கிழமை செண்டிமெண்ட், எப்போவும் போல விஜய் படம் வெள்ளிக்கிழமை ஜனவரி 13 ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.