கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடைசியாக நடித்து பாதியில் நிறுத்தப்பட்ட 'தமிழன் என்று சொல்' படப்பிடிப்பு தளம். வீடியோ வைரல்.

Vijayakanth last cine video

ஒருவர் இறந்த பின்பு நல்லவர் என்ற பட்டம் வாங்குவது இயல்பாக நடக்கும் நிகழ்வு. வாழும் போதே அந்த நல்லவர் பட்டம் வாங்குவது மிகவும் அரிதான ஒன்று. அந்த நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரர் நம் கேப்டன் விஜயகாந்த் ஐயா. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர்.

தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர்.

Vijayakanth last cine video

  • ஹீரோவாக நடித்து கிட்டதட்ட 13 ஆண்டுகள் ஆகிவிட்டது
  • திரையில் தோன்றி 8 வருடங்களுக்கு மேல் ஆகிறது
  • தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது
  • பொதுகூட்ட மேடைகளில் பேசி பல ஆண்டுகள் ஆகிறது
  • ஆனாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக குவிந்து தங்கள் இறுதி மரியாதை செலுத்துகிறார்கள், வரிசையில் காத்திருக்கிறார்கள் கதறுகிறார்கள், கலங்குகிறார்கள்
  • எப்பேர்பட்ட பெருவாழ்வை வாழ்ந்திருக்கிறீர்கள் கேப்டன், எவ்வளவு பேரை சம்பாதித்து இருக்கிறீர்கள் கேப்டன்

தமிழ்நாட்டு மக்கள் அவ்ளோ சீக்கிரம் யார் மேலயும் அன்பு வச்சிற மாட்டாங்க அப்படி வச்சிட்டா சாகுற வரைக்கும் அந்த அன்பு மாறவே மாறாது. உங்கள் பேச்சுக்கள், படங்கள், பாடல்கள் மூலம் என்றும் மக்கள் மனதில் வாழுவீங்க கேப்டன்.

வீடியோ:

Related Posts

View all