KGF, காந்தாராக்கு அப்புறம் கன்னட சினிமா லெவெல் மாறிடுச்சு. சூரரை போற்று போல. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
1976ம் ஆண்டு ஒரே ஒரு வாகனத்துடன் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்து, சரக்கு போக்குவரத்து துறையில் இறங்கிய விஜய் சங்கேஸ்வர், இன்று இந்தியா முழுவதும் அறியப்படும் VRL என்னும் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து நிறுவனத்தின் உரிமையாளராக எப்படி உயர்ந்தார் அவர் கடந்து வந்த பாதை எப்படி இருந்தது ஆகியவை இந்த படத்தில் பதிவு செய்யப்படுகிறது.
BIOPIC என்றாலே ஒருவரின் வெற்றிப் பயணத்தின் பின்னணியிலுள்ள அவரது கடுமையான உழைப்பையும், அவர் சந்தித்த சவால்களையும் சுவாரசியமான பார்ப்பவர்களுக்கு motivate ஆகும்படி திரைப்படமாக சொல்லவேண்டும். அப்போது தான் மக்கள் ஈஸியாக காங்நேச்ட் ஆவர். இந்த படகில் அவர் மட்டும் அல்லது அவரிடத்து மகனான அவரது மகனான டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வர் கதாபாத்திரமும் இருக்கிறது. விஜய் சங்கேஸ்வரின் பயணம் எப்படி வெற்றிகரமாக அமைந்தது என்பதை ஆனந்த் அவர்களின் உதவியுடன் படமாக்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்தை இயக்கியவர் ரிஷிக சர்மா. கன்னட சினிமாவின் ஒரு முக்கியமான பெண் இயக்குனர். எப்படி நமக்கு சுதா கொங்கரா, காயத்ரி போன்ற இயக்குனர்கள் உள்ளனரோ அதுபோல அங்கு இவங்க. இவங்க 2018ம் ஆண்டு வெளியான trunk என்ற த்ரில்லர் படம் மூலம் கன்னட சினிமாவுக்கு அறிமுகம். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நிகள் தான் இந்த படத்திலும் விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
எப்போதுமே biopic படம் எல்லாம் வந்தால் நான்கு பெயரை inspire பண்ணும் விதத்தில் தான் இருக்கும். அதனால் biopic-ஆக வந்த படங்கள் எதுவும் இதுவரை பிளாப் ஆனதாக சரித்திரம் இல்லை. இந்த படமும் அந்த வரிசையில் இணையும் என்று நம்புகிறோம். தற்போது கன்னட சினிமாவில் மாதாமாதம் ஒரு பான் இந்தியா படம் வந்துவிடுகிறது. இந்த பத்மாவும் ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் வெளியாகிறது.
“விஜயானந்த்” திரைப்படத்தின் டிரெய்லரை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டார். விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்று படமான ‘விஜயானந்த்’ படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வைரல்..
Video: