ஐயோ வாணி.. இப்படியொரு லவ்வு எல்லாம் நமக்கு கனவு தான் போல.. என்னா அழகு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒரு சில படங்களில் ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரி எல்லாம் பார்க்கும்போது நமக்கே பொறாமையா இருக்கும் சிங்கிள் பசங்க பெண்களுக்கு. ஏனென்றால் ஐயூ இந்த மாதிரி ஒரு பார்ட்னர் நமக்கு கிடைக்கலையே என்று தான். அந்த ஏக்கம் ஒரு சில பசங்களுக்கு எப்போவுமே இருக்கும், அதுவும் 90ஸ் கிட்ஸ் எல்லாம் என்கிட்ட இருப்பாங்க. பாவம்.
தற்போது பாயும் ஒளி நீ எங்கு படத்தில் இருந்து ஒரு சிங்கிள் ரிலீஸ் ஆகியிருக்கு, விக்ரம் பரப்புக்கும், வாணி போஜனுக்கும் அப்படியொரு கெமிஸ்டரி. ரொம்ப அருமையா படம் பிடிச்சிருக்காங்க. கண்டிப்பா கேமராமேனை பாராட்டியே ஆக வேண்டும். அந்த காட்சிக்கு லைட் எல்லாம் சூப்பரா செட் பண்ணிருக்காரு. அருமை.
தபோது இந்த படத்தை பற்றி பேசுவோம். ரொம்ப நாளைக்கு முன்னாடியே இந்த படத்தின் டீசர் வெளியாச்சு. உடனே ரிலீஸ் ஆகிடும் என்று நினைத்தோம் ஆனால் இன்னும் ரிலீஸ் அகல. ஜூலை மாதம் ரிலீசுக்கு தயாராகிட்டு இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுது, எவ்வளவு உண்மை என்று அது தெரியல. நிறைய வைட்டிங் படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆக இருக்கு.
பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பிரபு நல்லா நடிச்சிருந்தார். அவர் சோலோவா படம் நடிச்சு ரிலீஸ் ஆகி கொஞ்ச நாள் ஆயிடுச்சு, டாணாக்காரன் படம் சிறப்பான வரவேற்பை பெற்றது ஆனால் அது OTT ரிலீஸ். இந்த படத்தில் பார்ப்பதற்கு ரொம்ப ஸ்டைலா இருக்காரு, அந்த தாடி கெட்டப் எல்லாம் சூப்பரா சூட் அவுத்து. நீங்களே பாருங்க.
Video: