ஜாலியாக காதல் மனைவியுடன் பீச்சில் ஷில்லிங் செய்த விக்ரம் பிரபு. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
விக்ரம் பிரபு ஒரு தரமான நடிகர் விஷ்ணு விஷால் மாதிரி. ஒரு சில படங்கள் அப்படி இப்படி இருந்தாலும், இவர் நடித்த நிறைய படங்கள் ஹிட் தான். செம்ம performer. இந்த பொன்னியின் செல்வன் படத்திலும் நச்சுனு நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுது. ஏனென்றால் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் அப்படி.
சிற்றரசின் இளவரசன். வந்தியத்தேவனின் உற்ற நண்பன். இவனை பார்க்க கடம்பூர் மாளிகைக்கு வந்தது தான் மிகப்பெரிய திருப்புமுனையாக வந்தியத்தேவனுக்கு இருந்திருக்கும். வீரம் மிக்கவன் வழக்கம் போல அவசர புத்திக்காரன் வந்தியத்தேவனின் நண்பன் அல்லவா. அவன் பெயர் பார்த்திபேந்திர பல்லவன்.
நடிகர் விக்ரம் பிரபு தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படம் ரிலீஸ் ஆக கொஞ்ச நாள் தான் இருக்கு, இவருடைய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மனைவியுடன் ஜாலியா ஒரு பிரேக் எடுத்துள்ளார் விக்ரம் பிரபு.
ட்ரிப்பை முடித்துவிட்டு சீக்கிரம் வந்து படத்தின் ப்ரோமோஷனலில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் படத்தின் ரிலீசுக்கு 15 நாட்களே உள்ளது. இன்னும் கொஞ்சம் சீரியசாக ப்ரோமோஷன் செய்தால் பான் இந்தியா வெற்றி கிடைக்கும்.