ரஜினி, விஜய், அஜித் கொஞ்சம் தள்ளி நில்லுங்க பா.. நாயகன் மீண்டும் வந்துவிட்டார்.. ரெகார்ட் பிரேக்கிங் கலெக்சன்.. வைரல் வீடியோ.!
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து வசூல் சாதனைகளையும் விக்ரம் முறியடித்துவிட்டது. தமிழ் சினிமா மட்டுமல்ல மொழி மாற்று படங்களான பாகுபலி 1, பாகுபலி 2, KGF2 வசூல் சாதனைகளையும் முறியடித்துவிட்டது என 100 சதவீதம் சொல்லலாம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
திருப்பூர் சுப்பிரமணியம் கிட்ட தட்ட சினிமா விநியோகஸ்தராக 35 ஆண்டுகளுக்கு மேல் உள்ளார். அதனால் இவர் சொல்வதை கண்டிப்பாக நம்பலாம்.
தமிழகத்தில் 165 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கும் விக்ரம் உலக அளவில் 410 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை கடந்திருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் பல இடங்களில் ஸ்ட்ராங்காக போய் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் அதிக வசூல் செய்து, அதிக பங்கு தொகை கொடுத்த இரண்டு படங்களின் இயக்குனர் என்கிற பெருமை பெற்றுள்ளார் லோகேஷ் .
Viral Video:
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து வசூல் சாதனைகளையும் #விக்ரம் முறியடித்துவிட்டது, தமிழ் சினிமா மட்டுமல்ல மொழிமாற்று படங்களான #பாகுபலி1 #பாகுபலி2, #KGF2 வசூல் சாதனைகளையும் முறியடித்துவிட்டது என 100 சதவீதம் சொல்லலாம் - திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் #சுப்பிரமணியம்💥💥 pic.twitter.com/p3EWvkQkta
— SundaR KamaL (@Kamaladdict7) June 26, 2022