விக்ரம் விமர்சனம்: தமிழ் சினிமாவ அடுத்த லெவெலுக்கு கொண்டு போறதுக்கு முதல் படி. பேன் பாய் சம்பவம் டா எலேய் ..!

Vikram review first on net

இன்று தமிழ் சினிமாவே எதிர்பார்க்கப்பட்ட உலகநாயகனின் விக்ரம் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்துல என்ன புதுசுன்னா இதுவரை தமிழ் சினிமா இயக்குனர்கள் பண்ணாததை லோகேஷ் பண்ணிருக்கார்.

Vikram review first on net

ஆமா, மல்டி யூனிவெர்ஸ் கான்செப்ட்.

விக்ரம் படம் பாக்கறதுக்கு முன்னாடி கைதி படம் பாத்திடுங்க. அவ்ளோ தா சொல்லுவோம்.

Vikram review first on net

விக்ரம் படம் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஒரு TRIBUTE. முதல் பாதில பகாத் பாசில், விஜய் சேதுபதி செம்மயா ஸ்கோர் பண்றாங்க, இன்டெர்வல் பிளாக் நெருங்க நெருங்க அப்படி ஒரு சம்பவம் இருக்கு. கண்டிப்பா disappoint ஆகமாட்டீங்க.

இவன் வரலாறும் ஒரு யுகம் பாடும்
துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம்

Vikram review first on net

அப்டின்னு பாடல் வரிகள் சும்மா எல்லாம் எழுதுல, கமல நீண்ட நாட்கள் கழித்து திரையில் இந்த மாதிரி ஒரு படத்துல தான் பார்க்கணும்னு நெனச்சோம். பார்த்துட்டோம். அதுக்கே லோகேஷுக்கு ஒரு பெரிய நன்றி.

Vikram review first on net

படத்தின் முதல் பாதியில் பகத் பாசில் விசாரணை பல விஷங்களை முடிச்சு போட்டுக் கொண்டே வருகிறது. இரண்டாம் பாதி திரைக்கதையில் ஒவ்வொரு சஸ்பென்ஸ் முடிச்சுகள் அவிழ்கிறது.

screenplay ரொம்ப பிரெஸ்ஸா இருக்கு.

Vikram review first on net

அனைவரின் நடிப்பும் பிரமாதம். அனிருத்தின் பின்னனி இசை படத்தை ஒரு படி மேலே ஏற்றுகிறதுன்னு தான் சொல்லணும். கண்டிப்பா இது அனிருத் era தான், அது மாற்றமே இல்லை.

கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் அதுவும் கடைசி 20 நிமிடம் படம் நின்னு பேசும். சூர்யா பிரிச்சு மேஞ்சுட்டார். அடுத்த 1 வரம் சூர்யா ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது.

Vikram review first on net

அந்த கைதி-விக்ரம் கனெக்ட்லாம் வேற லெவல்.

ஒரு கமல் ரசிகனின் ஒட்டுமொத்த வெறித்தனம் தான் இந்த விக்ரம். பிளாக்பஸ்டர்.

ரேட்டிங்: 4/5

Related Posts

View all