அப்போ நீங்க நடிகர் வினையை தான் லவ் பண்றீங்களா.. க்ளூ கொடுத்த ராமன். லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் வினய், சமீப காலமாய் சில படங்களில் வில்லனாய் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன பொன் மாதிரி, நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட்டு கொடுத்துட்டு வந்தார், லைட்டா ட்ராக் மாறிடுச்சு. இவரும் நடிகர் மாதவன் போல பெண்கள் உள்ளங்களில் கையெழுத்து போட்டவர். என்ன ரொம்ப நாள் ஹீரோவா நிலைத்து நிற்க முடியாம போய்டுச்சு.
இவர் நடித்த உன்னாலே உன்னாலே படம் தான் இன்னும் சில பெண்களுக்கு பசங்களுக்கு லவ் படம்னாலே அது தான் பேவரைட்டா இருக்கும். அப்படி ஒரு காதல் காவியம் அது, ஹாரிஸ் இசையமைப்பாளர் சும்மா ருத்ர தாண்டவம் ஆடிருப்பாரு. கதைக்கும் அந்த இசைக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும். வினய் அந்த ஒரு படத்தில் நடித்ததற்காக பெருமை கொள்ளலாம்.
வினய்க்கு இப்போ 40 வயதை கடந்துவிட்டார், என்னடா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லையா என்றால் இல்லை தான். ஆனால் காதல் வலையில் கொஞ்ச வருடமாக விழுந்திருப்பார் என்று இவர் போடும் புகைப்படங்களில் தெரிகிறது. காதலி இவங்க தானா என்று முழுசா தெரியவில்லை ஆனால் ஹின்ட் கொடுத்திருக்காங்க, அதிகாரபூர்வ அறிவிப்பி இல்லை.
நடிகர் வினய் தற்போது எங்க போனாலும் ஒரு கதாநாயகியை அழைத்து செல்கிறார் அவங்க வேற யாருமில்லை விமலா ராமன் தான், இவர்களுக்கும் இவங்க நடிச்சுட்டு இருக்கும்போது ஏகப்பட்ட ரசிகர்கள். இவங்க சமீபத்தில் ஆஸ்திரேலியால இருக்காங்க அதுவும் வினய் கூட தான். அப்போ அவங்க எழுதிய கேப்சனில் ‘பேமிலி’ என்று குறுப்பிட்டிருக்காங்க. நீங்களே பாருங்க.