எல்லாம் ரிலீஸ் பண்றாங்க மிரட்டலா இருக்கு.. எப்போ படத்தை ரிலீஸ் பண்ணுவாங்க. லத்தி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
விஷால் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் லத்தி, இந்த படத்தின் மீது பயங்கரமான எதிர்பார்ப்பு. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே ஆடியோ, டீசர் வெளியிடும் விழா எல்லாம் பிரமாண்டமாக நடந்தது. படம் சீக்கிரம் வெளியாகிவிடும் என்று பார்த்தால் ரிலீஸ் தேதி அறிவிக்காமல் தள்ளி வைத்துக்கொண்டே இருக்கின்றனர். இது இந்த படத்துக்கு பெரிய பின்னடைவு. ஆடியோ, டீசரை பார்த்து படம் செம்மையாக இருக்கும் என்று நினைத்த மக்களே இவ்வளவு நாள் ஆன நிலையில் அந்த hype மறந்திருப்பர்.
மீண்டும் கொஞ்சம் செலவு செய்து ரிலீசுக்கு முன்னர் எதாவது விழா கண்டிப்பாக பண்ண வேண்டும், அப்போது தான் இன்னும் கொஞ்சம் நல்ல ரீச் இருக்கும். இந்த படத்தை விஷால் ரொம்ப நம்புறது கண்டிப்பா ஹிட் ஆகும் என்று. அதனால் தான் அவருடைய நண்பர்களையே தயாரிப்பாளராக அறிமுகம் செய்து அழகு பார்க்கிறார். ஆம், விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ராணா தான் படத்தின் தயாரிப்பாளர்கள். கடன் வாங்கி தான் தயாரிக்கின்றனர், இந்த படத்தின் வெற்றியை பொறுத்தே அவர்கள் வாழ்வாதாரம் இருக்கிறது.
படத்தில் விஷாலுக்கும் ரொம்ப ஒரு matured ரோல், அதேபோல் சுனைனாக்கும். இவங்க ரெண்டு பேரோட pair திரையில் செம்ம க்யூட்டாக இருக்கிறது. இந்த படத்தில் இருவரும் ஒரு மகனுக்கு அம்மா அப்பாவாக நடிக்கின்றனர். கிளைமாக்ஸ் காதசி எல்லாம் அந்த பையனை வைத்துக்கொண்டே தான் சண்டை எல்லாம் போட்டுள்ளார். நிறைய அடி எல்லாம் பட்டிருக்கு, அந்த உழைப்புக்கு கண்டிப்பாக இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கும்.
யுவன் இசையில் இந்த படத்தின் Thotta Load Aage Waiting பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல்.
Video: