உங்களுக்கு ஒரு கல்யாணம் நடக்கலியே என்று வருந்திய பெண்மணி. காதல் கல்யாணம் செய்வேன் என்று சொன்ன விஷால். வீடியோ வைரல்.

Vishal marraige chennai update

திருவள்ளுர் மாவட்டம் புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் 10 ஏழை பெண்களுக்கு திருமண விழா நடைபெற்றது. சென்னை மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்தார் நடிகர் விஷால். 51 பொருட்கள் அடங்கிய சீர்வரிசையையும் மணமக்களுக்கு வழங்கினார். மும்மதங்களிலும் வழிபட்டு, மணமக்களுக்கு தாலி எடுத்து கொடுத்தது மிகச்சிறப்பு.

காசியாத்திரையில் விஷாலுக்கு ஒரு ஜோசியர் “10 ஏழை ஜோடிக்கு 51 சீர்வரிசையோட கல்யாணம் பண்ணி வச்சியன்னா ஒனக்கு கல்யாணம் ஆகும்"னு சொல்லிட்டாராம் என்று ஒரு குரூப் ட்விட்டரில் சொல்லி வருகிறது. ஆனால் உண்மை என்னவென்று அதை அவர் இன்று நடந்த பேட்டியில் குறிப்பிட்டுவிட்டார்.

Vishal marraige chennai update

இன்னைக்கு என்னோட குடும்பம் பெருசாயிருக்கு, எனக்கு 11 தங்கச்சிங்க கிடைச்சிருக்காங்க. நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணி நிறைவடைந்ததும் திருமணம் செய்து கொள்வேன். நிச்சயம் காதல் திருமணம் தான் செய்வேன். ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த பின் நடிகர் விஷால் பேட்டி.

ஊருக்கே கல்யாணம் பண்ணி வக்கறீங்க. ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆகாதது மனசுக்கு கஷ்டமா இருக்கு - விஷாலை பார்த்து வருத்தப்பட்ட பெண்மணி. அந்த வீடியோ இணையத்தில் வைரல்.

Video:

Related Posts

View all