நீ தோத்துட்ட டா அப்டின்னு நினைத்த இடத்தில் இருந்து.. அடுத்த படம் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடிக்கிறார். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சினிமாவில் யாருமே கஷ்டப்படாம ஜெயிச்சதேயில்லை. அப்படி படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும் கடின உழைப்பு இல்லாததால் நிறைய நல்ல நடிகர்களே காணாமல் போயிருக்கின்றனர். உதாரணமா நிறைய நடிகர்களை கூறலாம். ஆனால் ஒரு சில நடிகர்களே வாழ்க்கையில் எவ்வளவு சிரமங்கள் வந்தாலும், அதையெல்லாம் பார்த்து அஞ்சாது எதோ ஒன்று பண்ணி முன்னுக்கு வந்திடுவாங்க, அப்படிப்பட்ட நடிகர்களில் விஷ்ணு விஷால் ரொம்ப முக்கியமானவர்.
நமக்கு அனைவர்க்கும் தெரியும் விஷ்ணு வந்து ஒரு தரமான கிரிக்கெட்டர் என்று. ஆனால் அவரால் கிரிக்கெட் விளையாடாமல் போய்விட்டது காரணம் சின்ன வயதில் அவருக்கு ஏற்பட்ட காயம், பின்னர் சினிமாவில் ட்ரை செய்து 6 வருட போராட்டத்திற்கு பின் இவருக்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைத்தது வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரி கூட்டம் படங்களால். இப்போ 13 வருடம் சினிமாவில் நின்று விட்டார் என்பது அவ்வளவு பெரிய விஷயம்.
இது மாதிரி ஒருவரின் கதைகள் எல்லாம் நமக்கு inspiring தான், நமக்கு ஒன்று புடித்திருந்தால் அதில் முழு effort போட்டு ஜெயிக்க வேண்டும் என்ற வெறியுடன் போராட வேண்டும். அப்படி போராடியவர்கள் யாரும் இதுவரை தோற்றதில்லை, கொஞ்சம் அதை தவறவிட்டவர்களே இதுவரை தோற்றுள்ளனர். ஜெயித்தோமா தோற்றோமோ என்பதை விட முயற்சி செய்தோமா இல்லையா என்பதில் இருக்கிறது மனதுக்கு திருப்தி.
கட்ட குஸ்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவருடைய கதை ஒன்று சொல்லிருப்பார் பாருங்க, அவ்வளவு அழகு ஒரு கோர்வையாக சொல்லிறப்பாரு. அன்று வாழ்க்கையில் தோற்றுவிட்டோம் என்று நினைத்த அவர் அடுத்த படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பண்ணுகிறார் என்றால் நினைத்து பாருங்கள். இதுதான் வெற்றி. நல்ல ஒரு inspiring வீடியோ, பார்த்து motivate ஆகிக்கோங்க.
Video: