மரங்களை வளர்த்து அறம் செய்த கலைஞனுக்கு இரண்டாமாண்டு நினைவுஞ்சலி... Unseen வீடியோ வைரல்.

Vivek 2nd year anniversary

திரைத்துறையில் தனி முத்திரை பதித்திருந்தாலும் ஐயா அப்துல் கலாம் அவர்களின் அறிவுறுத்தலின் படி லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு சூழலியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய திரைக் கலைஞர் விவேக் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.

கருணை தெய்வம் கைகள் நீட்டி, அணைக்கத் தாவும் ஆலயம்

தியாகம் என்னும் ஒளியினாலே, தீபம் ஏற்றும் ஆலயம்

விவேக் ❤️🙏

Vivek 2nd year anniversary

இளைஞர்கள் தொடர்ந்து மரங்களை நடவேண்டும் அதுதான் விவேக் அவர்களுக்கு செய்யும் மரியாதை.சங்க காலம் தொட்டு மறம் கொண்டு காத்தது போதாதென்று கால மாற்றத்தால் மரம் கொண்டும் நாம் காக்க வேண்டும் முன்வாருங்கள் என்று பெரும்புரட்சி செய்த புரட்சியாளன். மறம் வளர்த்த கூட்டத்தில் மறத்தோடு சேர்த்து மரங்களையும் வளர்த்த பசுமை நாயகன்.

மக்களையும், மரங்களையும் நேசித்த மனிதநேயமிக்க மாபெரும் கலைஞன் மண்ணை விட்டு மறைந்த இன்னாளில் அவர் நினைவை போற்றுவோம்! உலகை விட்டு மறைந்தாலும் உங்கள் புகழ் இந்த பூமியில் என்றும் நிலைத்து இருக்கும்.

இளைஞர்கள் தொடர்ந்து மரங்களை நடவேண்டும் அதுதான் விவேக் அவர்களுக்கு செய்யும் மரியாதை.

Video:

Related Posts

View all