ரொம்ப மிஸ் பன்றோம் சார் உங்கள. ‘சின்னக்கலைவாணர்’ விவேக் பிறந்த தினம் இன்று. அவருடைய ஆடியோ வைரல்.
நகைச்சுவை என்பது சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் என்பதை தான் நடித்த திரைப்படங்களின் வாயிலாக எடுத்துரைத்தவர் சின்னக் கலைவாணர் விவேக் அவர்கள்.
நம் மனதில் நீங்கா இடம் பிடித்த விவேக் அவர்களின் பிறந்த தினமான இன்று, அவரது சமூக அக்கரையை போற்றி வணங்குவோம்.
நாம் ஒவ்வொருவரும் மறவாமல் மரக்கன்றுகள் நடுவோம். நடிகர் விவேக் அவர்களின் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுதல் இலக்கை பூர்த்திசெய்வோம். அவரது பிறந்தநாளில் அவர்க்கு இதுவே நாம் செய்யும் மரியாதை. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து மக்களின் இதய சிம்மாசனத்தில் ஆளுமை செய்த முடிசூடா மன்னன், ஜனரஞ்சக கலைஞன், சின்ன கலைவாணர் பற்றி நினைக்காத நாளில்லை.
பெற்ற விருதுகள் சில: சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்’ பெற்றார். சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான ‘எடிசன் விருது’. சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘கொடைக்கானல் பண்பலை வானொலி விருது’.
‘உன்னருகே நானிருந்தால்’, 2002-ல் ‘ரன்’, 2003ல் ‘பார்த்திபன் கனவு’, 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக தமிழ் நாடு அரசின் மாநில விருது வழங்கப்பட்டது. சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஐ.டி.எஃப்.ஏ விருது.
2002-ல் ‘ரன்’, 2003ல் ‘சாமி’, 2004-ல் ‘பேரழகன், 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’.
கலையுலக நாயகர், ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று சொன்ன வள்ளலாரின் உயிர்நேயத்தை அய்யா அப்துல் கலாம் அவர்களின் பாதையில் முன்னெடுத்தவர், சின்னக் கலைவாணர் நடிகர் விவேக் அவர்களின் பிறந்த நாளில் அவரின் கொள்கைகளை நெஞ்சில் நிறுத்துவது நம் கடமை.
தனிமையில் அழுத பலருக்கு தன்னம்பிக்கை கொடுத்து வலிகளை வலிமையுடன் எதிர்கொள்ள வைத்தவர் விவேக்!
அவர் பேசிய வசனங்களில் ஒன்று தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு!
ஜனங்களை புன்னகையால் கவர்ந்த மரங்களின் நாயகன் விவேக் அவர்களை உயிருள்ளவரை போற்றுவோம். பசுமை கலாம் என்ற அமைப்பின் மூலம் பல லட்சம் மரக்கன்றுகள் நட்டு இயர்க்கையன்னையின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்தவர்.
அவருடைய நீங்கள் இதுவரை கேட்டிராத ஆடியோ:
Happy Birthday #Vivek Sir
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) November 18, 2022
விவேக் சார் என்னிடம் பேசிய கடைசி பேச்சு ஆடியோ #HappyBirthdayVivek#HBDVivek pic.twitter.com/8oI9zpIQnh