விஜய்சேதுபதி செம்ம மாஸ் ஹீரோவா.. ஷிவானி நாராயணன் செம்ம ஹாட் ஹீரோயின்ன விட.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நீண்ட நாள் கழிச்சு விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் ஒரு படம் ரிலீஸ் ஆக போகுது. ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் முன்னர் சன் pictures தான் தயாரிப்பதாக இருந்தது, ஆனால் காய் மாற்றிவிட்டது போல. சர்தார் என்னும் பெரிய கிட் படத்தை கொடுத்த இயக்குனர் லட்சுமண் குமார் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் அனுகீர்த்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இவங்களுக்கு இது முதல் படம். அழகியா பட்டம் எல்லாம் வென்றிருக்காங்க. இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நம்ம ஷிவானி நடிச்சிருக்காங்க. இப்படி ஒரு போலீஸ் இல்லையே என்ற ஏக்கம் கண்டிப்பா ரசிகர்களுக்கு வரும். செம்ம அழகா இருக்காங்க. இவங்கள ஹீரோயின்னா கூட போட்டிருக்கலாம், ஏன் இன்னும் சப்போர்டிங் ரோல் மட்டும் பண்றாங்க என்று தெரியவில்லை. ரொம்ப சின்ன வயது வேற, வாய்ப்பை யூஸ் பண்ணிக்கணும்.
திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் நாடாகும் கதையை மையமாக கொண்டு உருவாகியிருக்கிறது இந்த படம். முட்டை ரவி என்பது வில்லன் பெயர். திண்டுக்கல்லில் எது எல்லாம் பிரபலமோ அதை எல்லாம் வைத்து வில்லன் கதாபாத்திரத்தை உருவாகியிருப்பார் போல. முதல் பாதியில் விளையாட்டு பையனாக இருக்கும் விஜய் சேதுபதி, அரசாங்க வேலை வேண்டும் என்ற உறுதியுடன் அவரோட அப்பா, பின் எப்படி போலீஸ் ஆகிறார்.
அதற்குப்பின் என்ன நடந்தது. ஏன் தலைமறைவாக இருக்கிறார் பின்னர் எப்படி வில்லனை எதிர்கொள்கிறார் நாதத்தில் இருக்கிறது சுவாரசியம். இதுபோல பல படங்கள் வந்தாலும் படம் என்டேர்டைன் பண்ணினாள் ஹிட் தான். அதை பொன்ராம் சரியாக செய்யக்கூடியவர். இந்த படத்திலும் செய்திருப்பார் என்று நம்புகிறோம்.