பயப்படாதீங்க அவரு விஜய் சேதுபதி தான்.. மிரட்டலான வயதான தோற்றத்தில்.. மைக்கேல் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
விஜய் சேதுபதி மாதிரி ஒரு versatile நடிகரை தற்போது இந்திய சினிமா இருக்கும் நிலைமையில் அவரை விட்டா வேறு யாரும் இல்லை என்றளவுக்கு முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார். விஜய் சேதுபதியிடம் ஒரு கதை போகிறது என்றால், அந்த கதைக்கு வேற ஒருத்தர் ஹீரோவாக இருந்தாலும் அவருக்கு கதை பிடித்து விட்டால் அந்த படத்தில் ஒரு கேரக்டர் ரோலில் நடிக்க கூட தயங்கமாட்டாரு.
ஒரு நல்ல கதைக்கு கதாபாத்திரங்கள் தான் முக்கியம். அந்த கதாபாத்திரங்களின் பின் கதையை வைத்து அந்த கதை நகரும்போது சுவாரசியமாக இருக்கும். போனி கபூர் சமீபத்தில் காணொளியில் கூட சொல்லியிருந்தாரு கன்டென்ட் தான் கிங் என்று. ஒரு நடிகரின் stardom என்பதை எல்லாம் தாண்டி அவங்களுக்கு தேவை ஒரு நல்ல கதை.
ஒரு நல்ல கதைக்குள் அவர்கள் கதாபாத்திரங்களாக இருந்தால் அந்த படம் வெற்றி என்பதை தாண்டி பாக்ஸ் ஆபிசில் மேஜிக் செய்யும். பாக்ஸ் ஆபிசில் மேஜிக் நடக்க இன்னொரு விஷயம் இருக்கிறது, ரொம்ப எளிமையான கதையை வைத்து கூட திரைக்கதையில் மேஜிக் செய்பவர்கள் பலர் இருக்கின்றனர். அந்த படங்கள் தான் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய் சேதுபதி நடித்துக்கொண்டிருக்கும் படம் கூட நல்ல கதையம்சமுள்ள காங்ஸ்டர் படம் என்று தான் நினைக்கிறோம், இல்லையென்றால் அவரு டேட்ஸ் கொடுக்கமாட்டாரு. மாஸ்டர் படத்துக்கு பின் அவர் range மாறிடுச்சு. எல்லா மொழி சினிமாவும் அவரை அப்படியே அரவணைப்பு செஞ்சுக்கிறாங்க. மைக்கேல் படத்தின் வீடியோவை தான் அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷலாக பதிவேற்றம் செஞ்சிருக்காங்க.
Video: