67 வயசு ஆகுது.. இப்போவும் ஹீரோயின் கூட அப்படி ரொமான்சு.. சிரஞ்சீவி.. சுருதி ஹாசன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தெலுங்கு மேஜிஸ்ட்டார் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்து பொங்கலன்று வெளியாக இருக்கும் படம் வால்டர் வீரய்யா, இந்த படத்தில் சுருதி ஹாசன் கதாநாயகியா நடிக்கிறாங்க. இந்த படம் பொங்கலன்று வெளியாவதை முன்னிட்டு படத்தின் ப்ரோமோ வேலைகள் போயிட்டு இருக்கு. அப்படி முதல் சிங்கிள் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ரிலீஸ் ஆனது, பழைய சிரஞ்சீவி திரும்ப வந்துவிட்டார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்திருகின்றனர். எதை வைத்து என்று தெரியவில்லை.
இந்த படத்தின் அடுத்த சிங்கிளை தற்போது படக்குழுவினர் வெளியிலிட்டிருக்கின்றனர். அது படு ரொமான்ஸ் வீடியோ சிரஞ்சீவிக்கும் சுருதி ஹாசனுக்கும். எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னதான் திரையில் பார்க்க இன்னும் யங்கா தெரிந்தாலும், ஒரு வயதுக்கு பின் அதற்கேற்றவாறு படங்கள் செலக்ட் செய்து நடிப்பது மரியாதை. அதுவும் சிரஞ்சீவி போன்று மெகாஸ்டார் எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்.
அதுமட்டுமில்லாமல் இந்த படம் தான் இந்த பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு படத்துடன் மோத வருகிறது. இதற்காக தான் திரையரங்கு பிரச்சனைகள் போய்ட்டு இருக்கின்றன. வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தெலுங்கர் என்பதால் வாரிசுக்கு screen கிடைத்துவிடும், ஆனால் துணிவு பற்றி இதுவரை எந்த அப்டேட்டும் இதுவரை இல்லை. நேற்று வெளியான காசேதான் கடவுளடா பாடலை கேட்டு ரசிகர்கள் என்ஜாய் செய்து வருகின்றனர்.
சுருதி ஹசன் தமிழை விட மற்ற மொழிகளில் தான் படு பிசி. இவங்க அடுத்து எப்போ தமிழில் நடிப்பாங்க என்று இருக்கிறது. ஏனென்றால் இங்கும் இவங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். இவரின் நடிப்பை விட குரலுக்கு ஒரு பெரிய ரசிக பட்டாளமே இருக்கு என்பதில் சந்தேகமில்லை. கமல் போலவே அவங்களும் மல்டி talented. சீக்கிரம் ஒரு தமிழ் படம் நடிங்க சுருதி.
Video: