நம்ம போகஸ் மரியா தான்.. அப்படியே அவங்க ஆட்டத்துல ஏங்க வெச்சுட்டாங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சிவகார்த்திகேயன், மரியா நடிப்பில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், தமன்னா இசையில் வரும் தீபாவளியன்று வெளியாக இருக்கும் படம் பிரின்ஸ். இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அந்த இயக்குனர் எடுத்த இரண்டு படமும் காமெடிய படம் தான், இரண்டுமே தெலுங்கில் செம்ம ஹிட்டு. கடைசியாக வந்த ஜாதி ரத்னாலு படத்தை தமிழ் ரசிகர்கள் கூட தெலுங்கில் பார்த்து ரசித்தனர். அந்த நம்பிக்கையில் தான் சிவா இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார்.
இந்த படத்தின் கதைக்களம் முழுவதும் பாண்டிச்சேரியில் நடப்பது போல படமாக்கப்பட்டுள்ளது. நடிகர் சத்யராஜுக்கு முக்கியமான ரோல், அவரோட நக்கல் நய்யாண்டியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. இந்த படத்தின் அதிகளவில் பார்க்கலாம். இந்த படத்தின் மூலம் மரியா தமிழுக்கு அறிமுகம், எமி ஜாக்சன் போல இன்னும் ஒரு சில படங்கள் நடிப்பாங்க என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது படத்தின் அடுத்த பாடலான who am i பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை திருக்குறள் அறிவு பாடியுள்ளார். பெரிய அளவு இந்த பாடல் கனெக்ட் ஆகவில்லை. முந்தய பாடல்களில் இருந்த ஒரு துள்ளல் இந்த பாடலில் கொஞ்சம் குறைவு. ஆனால் சிவகார்த்திகேயன் நடனம் அதையெல்லாம் மறக்கடிக்கிறது. ஆரம்பம் கொஞ்ச நேரம் மரியாவை காட்டவில்லை, கடைசியில் சில நிமிடங்கள் அவங்க போடும் குத்தாட்டம் தான் ஒரு மாதிரி satisfy ஆகிறது. நிறைய பேர் பேன் கிளப் ஆரம்பிச்சிருப்பாங்க இந்நேரம்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வருகிறது இந்த படம், கார்த்தியின் சர்தாருடன் மோதுகிறது. அந்த படத்தின் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இந்த படம் காமெடியில் கொஞ்சம் பிசிறு தட்டினால் கூட அனைவரும் சர்தார் படத்துக்கு தான் டிக்கெட் புக் செய்வர். முழுக்க முழுக்க ரெவியூவை வைத்து தான் நிறைய பேர் போலாமா வேண்டாமா என்று முடிவு எடுப்பர். இப்போதைக்கு இந்த பாட்டை பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
Video: