15 பேரு செத்து போயிருக்காங்க நீங்க வெறும் வார்னிங் குடுத்துருக்கீங்க. பெரிய சம்பவம் இருக்கு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இன்றைய காலகட்டத்தில் மணி அடிக்கவும், தீபாராதனை காட்டவும் ரோபோவை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த அளவுக்கு டெக்னாலஜி தினம் தினம் உருவாகிக்கொண்டே இருக்கிறது. சாக்கடை குழாயில் இறங்கி சுத்தம் செய்கிறார்கள் அதற்கு ஒரு கருவிய மனிதன் கண்டுபிடிக்கலாம் அல்லது கண்டுபிடித்த கருவியை தமிழ்நாடு எங்கும் பயன்படுத்த வைக்கலாம்.
ஆளில்லா விண்கலன்களின் கண்டுபிடிப்பை விட, ஆளில்லா கழிவு அகற்றும் இயந்திரமே இந்தியா வல்லரசு என மார்த்தட்டிக் கொள்ள அவசியமான கண்டுபிடிப்பு. மலம் அள்ளும் தொழிலில் இன்றும் குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டும் தான் இருக்கிறார்கள். நிலவிற்கு சென்ற மனிதன் இருக்கும் இவுலகில் தான் சாக்கடை சுத்தம் செய்யும் மனிதனும் வாழ்கிறான் என்பது எவ்வளவு வருத்தமான விஷயம்.
Internetலியே வாழ்ந்துகொண்டு இந்தியா அமெரிக்கா, சீனா ஆயிரிச்சு என நினைப்பது மிக தவறு. பாதாள சாக்கடை பொந்தில் இன்னும் மனிதன் இறங்கிதான் சுத்தம் செய்றான். பேரிடரை சந்திக்க பெரிய அளவில் மீட்பு படைகள் வசதி நம்மிடம் இல்லை. இன்றும் எத்தனையோ மாநகராட்சி நகராட்சியில மனிதர்களே சாக்கடை சுத்தம் செய்யும் அவலம் நீடிக்கிறது. அவற்றால் ஏற்படும் மரணங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடமாம். கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இதுவரை எந்த படமும் இதைப்பற்றி பேசியதில்லை, கடைசியா ஒரு இயக்குனருக்கு தோன்றி இருக்கிறது இந்த ஐடியா. கண்டிப்பா தரமா பண்ணிருப்பார் என்று எதிர்பார்க்கிறோம். ரோகினி முக்கியமான ரோலில் நடிக்கிறாங்க, அதாவது மகனை சாக்கடையில் பலி கொடுத்த வலியில், கோர்ட் ஏறி குற்றவாளிகளை எதிர்க்கும் ஒரு பெண். ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கியமான ரோல் பண்ணிருக்காங்க. இந்த படம் வெற்றி அடையனும்.
Video: