பெண்கள் எல்லாரும் ஒண்டர் வுமன் தான.. அவ்வளவு பெண்களை அந்த நிலையில் பார்க்க அவ்வளவு அழகா இருக்கு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Wonder women video viral

ஒரு சக்ஸஸ்புல் பெண் இயக்குனர் என்றால் நம் மனதில் உடனடியாக தோன்றுவது சுதா கொங்கரா தான். ஏனென்றால் அவங்க சமீபத்தில் கொடுத்த ஹிட்னால். ஆனால் இன்னொரு பெண் இயக்குனர் இருக்கிறார் அவங்க பெயர் அஞ்சலி மேனன். இவங்களோட படம் போல ஒரு பீல் குட் வைப் எந்தவொரு இயக்குனராலும் கொடுக்கமுடியாது. பான் இந்தியா படம் என்று சொல்வதற்கு முன்னரே இவங்க எடுத்த ஒரு படம் மலையாள மொழியிலேயே மொத இந்திய சினிமா ரசிகர்களும் பார்த்து மகிழ்ந்தனர் என்றால் அது Bangalore days தான். பின்னர் ஆர்யா, ராணா நடிக்க தமிழில் ரீமேக் ஆனது.

Manjadikur, Ustad Hotel, Koode எல்லாம் இவங்க எடுத்த காவியங்கள். கதையே என்ன ஒரு பைண்டிங் மாதிரி இருக்கு என்று நாம் நம்மை மறந்து வர்ணிப்பது உண்டு. அதை இவங்களோட கதைகள் மூலம் பார்க்கலாம். எல்லா கதைகளும் நிஜ வாழ்க்கையில் நடந்த இன்சிடெண்ட்ஸ் வெச்சு தான் எடுப்பாங்க. ஆனால் எல்லா இயக்குனராலும் அதை நேர்த்தியாக திரையில் சொல்ல முடியாது, ஆனால் அஞ்சலி வேற லெவல். அவங்களோட தாட் ப்ரோசஸ் வேற மாதிரி இருக்கும், விஷன் வேற மாதிரி இருக்கும்.

Wonder women video viral

நாம் திரையில் பார்க்கும்போது நம்மை மறந்து படத்துடன் ஒன்றி பார்ப்போம், காரணம் அது போன்ற சம்பவங்கள் நம் வாழ்க்கையிலோ அல்லது உறவினர், நண்பர்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக நடந்திருக்கும். அதேபோல் ஒரு கதை தான் இன்று இவங்க செலக்ட் பண்ணி இருக்கிறது. கர்ப்பமான பெண்களை பற்றிய கதை. ஒரு மொழி பேசும் பெண்கள் அல்ல, பல மொழி பேசும் பெண்கள் ஓரிடத்தில் ட்ரீட்மெண்ட்காக வந்தால் எப்படி இருக்கும். அவ்வளவு ஜாலியான எமோஷன்ஸ் உடன் ஒரு கதை.

நதியா, நித்யா மேனன், பார்வதி முக்கிய ரோல் பண்றாங்க. என்னடா பல மொழி பேசும் நடிகர்கள் இருக்காங்க என்று சொன்னாங்க, தமிழ் வரலையே என்று ஆரம்பத்தில் இருந்தாலும் கடைசியில தான் ட்விஸ்டு. அந்த வாய்ஸ்… யாருடையது என்று தெரிந்தால் கமெண்ட் செய்யவும்.

Video:

Related Posts

View all