அருண் விஜய் மாஸ்.. பேமிலி ட்ராமா செண்டிமெண்ட் செம்ம.. மொத்தத்தில் ஹரி அந்த commercial brandஓட comeback தான் இந்த யானை படம்..!
படம் தொடங்கிய முதல் அதிரடி ஆரம்பம்.. நல்ல வேகமான திரைக்கதை, எதிர்பார்க்காத திருப்புமுனை. நல்ல மேமிலி சென்டிமென்ட்.. அருண்விஜய், ராதிகா, பிரியா பவானி சங்கர் பெர்பெக்ட் காஸ்டிங். படம் அட்டகாசமா இருக்கு. இதுவே சாதாரண மக்களின் review வாக இருக்கும்.
ஹரி அப்படிங்கிற பேருக்கே ஒரு பவர் இருக்கு. கமர்சியல் கிங். அதுக்கு அந்த டைட்டில் கார்டு தான் சாட்சி.
கொஞ்சம் detailed review:
இயக்குனர் ஹரி என்றாலே வேகமான திரைக்கதை இருக்கும், ஆனால் இந்த படத்தில் அவர் புதிதாக ஒரு முயற்சி செய்துள்ளார். பரபரப்பான ட்ரோன் காட்சிகள், வேகமாக அங்கும் இங்கும் கேமரா காட்டுவது என்பதை தவிர்த்து அட்டகாசம் செய்துள்ளார்.
முதல் பாதியில் வரும் அருண் விஜய் அறிமுக சண்டை காட்சிகள், திருவிழால வரும் வசனங்கள், சரக்கு கடையில் வரும் சண்டை காட்சி அனைத்தும் தரம். தன்னுடைய range என்னவென்று அருண் விஜய் காட்டியுள்ளார். மொத்தத்தில் முதல் பாதியில் ஹரி comeback தான்.
அதுவும் இன்டெர்வல் பிளாக் வேற லெவெலில் பண்ணிருக்காங்க. பேமிலி ட்ராமா, சென்டிமென்ட்ஸ் எல்லாமே செம்மயா ஒர்கவுட் ஆயிருக்கு.
குடும்ப ரசிகர்களுக்கு என்ன தேவையோ இரண்டாம் பாதில அள்ளி தெளிச்சு விட்டிருக்காரு ஹரி. முதல் பாதியை விட இரண்டாம் பத்தி வேகம், மாஸாகவும் இருந்தது.
பிரியா பவனி ஷங்கர் செம்மயா பண்ணிருக்காங்க, அம்மு அபிராமி, ராதிகா, சமுத்திரக்கனி எல்லாரும் சூப்பரா பண்ணிருக்காங்க. ஜிவி.பிரகாஷோட பின்னணி இசை மிரட்டல். பாட்டு ஒரு அளவுக்கு தான் என்றாலும் BGM வேற லெவல்.
ஹரியோட ஆஸ்தான கேமராமென் பிரியன் இல்லாத குறையை தீர்த்து வெச்சுருக்காரு கோபிநாத்.
யானை - பிளாக்பஸ்டர் - 3.5/5