ப்ப்பா யாரா இந்த பொண்ணு.. தூக்கத்துல கூட இவ்வளவு அழகு. பட்டத்து அரசன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Yaaro lyric video viral pattathu arasan](/images/2022/11/18/yaaro-lyric-video-viral-2-.jpg)
களவாணி இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா & ராஜ்கிரண் நடிக்கும் புதிய படம் “பட்டத்து அரசன்”. இந்த படம் கபடி போட்டியாகி மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறோம். கபடி என்றாலே நம் மனதில் வருவது கில்லி தா. இந்த படத்தின் எந்த மாதிரி கபடி இருக்கப்போகிறது என்று பார்ப்போம். சற்குணம் படம் என்றால் ஒரு எதிர்பார்ப்பு ஏற்கனவே சினிமா ரசிகர்களிடத்தில் உருவாகியுள்ளது.
எங்களுக்கு தெரிந்த வரையில் விமல் நடித்த 2 படங்கள்:
- களவாணி 2) வாகை சூட வா
இந்த 2 படங்கள்தான் பலருக்கும் விமலை நடிகனாக ஏற்க உதவியிருக்கும். களவாணி படத்தில் இயக்குனர் சற்குணம் தஞ்சாவூர் பகுதி பேச்சு வழக்கையும்,வாழ்க்கை முறைகளையும் அப்படியே பிரதிபலித்திருப்பார். சற்குணம் ஒரு வெறித்தனமான கமல் ரசிகர் என்பது அறிவோம். கமல் பற்றி அவர் கூறியது:
![Yaaro lyric video viral pattathu arasan](/images/2022/11/18/yaaro-lyric-video-viral-1-.jpg)
எனக்கு கமல் சார் கூட வேலை செய்யனும்னு ரொம்ப ஆசை ஏன்னா இன்னைக்கு வரைக்கும் கமல் சார் அளவுக்கு வீரியமான ஒரு வசனகர்த்தா இல்ல அவர் எழுதுன வசனங்களை எல்லாம் நான் ஆய்வே பண்ணியிருக்கேன், வசனம் மட்டுமே எழுத வந்தவங்க கூட அந்த அளவுக்கு வசனம் எழுதுனதே இல்லை என்று ரொம்ப பெருமையக கூறியுள்ளார். அனைவருமே அறிந்த ஒன்று கமலுக்கு நிகர் கமல் தான்.
மீண்டும் தமிழ் சினிமாவில் பட்டது அரசன் படம் மூலம் comeback கொடுக்கவுள்ளார் இயக்குனர் சற்குணம். அந்த படத்தின் ட்ரைலர் ரிலீசுக்கு முன்பே படத்தின் முதல் சிங்கிள் வெளியாகிவிட்டது. அதர்வ, ஆஷிகா இருவரும் ரொமான்ஸ் காட்சிகளில் அவ்வளவு அழகாக தெரிகின்றனர். இந்த படம் இருவருக்குமே ஒரு பிரேக் கொடுக்கும் என்று நம்புகிறோம்.
Video: