சிறிய முதலீடு + கடுமையான உழைப்பு = பிரம்மாண்ட படைப்பு யாத்திசை. முயன்றாலே வெற்றிதான். Public opinion.
பழைய வரலாற்றை அதுவும் ஏழாம் நூற்றாண்டு வரலாற்றை அப்படியே நம்முன் விரிய வைக்கிறது #யாத்திசை திரைப்படம்
சுதந்திரமாக வாழ விரும்பும் தொல்குடி எயினர்கள். ரணதீர பாண்டியன் கட்டுப்பாட்டில் உள்ள சோழ நிலப்பரப்பை மீட்பது தான் கதை. இயக்குனர் தரணி ராஜேந்திரன் அவர்களை பார்க்கும் போது…
பொன்னியின் செல்வனில்கூட சொல்லாத அரசர்களின் இன்னொரு முகம்… இதுதான் உண்மை முகம்… “அதிகாரம்” “யாத்திசை” மாபெரும் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று பார்த்தவர்கள் கருத்து.
யாத்திசை திரைப்படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருக்கும் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், அனைவருக்கும் வாழ்த்துக்கள். சிறிய முதலீடு + கடுமையான உழைப்பு = பிரம்மாண்ட படைப்பு.
சமீபத்தில் சோழர்களின் வரலாறாக புனையப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை படமாக லைக்கா நிறுவனம் தயாரித்து இயக்குனர் மணிரத்தினம் அவர்களால் #பொன்னியின்_செல்வன் பாகம்-1 படம் பெரிய வெற்றி பெற்றது. இதனுடைய இரண்டாம் பாகம் படம் வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், அதனை தொடர்ந்து பாண்டியர்களின் வரலாறாக யாத்திசை படம்.
Public Rating: 4/5