குடும்பமா அவ்வளவு அழகா இருக்காங்க.. மனைவி தேவதை மாதிரி.. யாஷ் லேட்டஸ்ட் கிளிக் வைரல்.
ஒரே படத்தில் ஓஹோ என்று வாழ்க்கை சமீபத்தில் ஒருத்தருக்கு கிடைத்தது என்றால் அது கன்னட சினிமா சூப்பர்ஸ்டார் யாஷ்க்கு தான். KGF 1&2 தான் நடிச்சார். இப்போ பான் இந்தியா ஸ்டார் ஆகிட்டார். அவர் பாருங்க அந்த படம் வெளியில் வந்த பிறகு ரொம்ப யோசிச்சு யோசிச்சு ஸ்கிரிப்ட் செலக்ட் பண்றார். இரண்டு வருடத்திற்கு பின் இப்போ தான் அறிவிப்பு வந்தது.
பாகுபலி படம் முடித்தவுடன் பிரபாஸ் பண்ணிய எல்லா படமுமே பான் இந்திய படமாகத்தான் வருது. அது அவருக்கு அவ்வளவு பிரஷர். அதுமட்டுமில்லாமல் பாகுபலியை தவிர வேறு எந்த படமும் முழுமையாக ரசிகர்களை திருப்தி படுத்தமுடியவில்லை. அதனால் இப்போ அடுத்து நடிக்கும் படம் ரொம்ப regional படமாக பண்றாரு.
யாஷ்க்கு அந்த பயம் வந்துவிட்டது போல, அதனால் தான் நிறைய கதைகளை நிராகரித்து கடைசியாக ஒரு கதையை தேர்தெடுத்துள்ளார். அந்த படத்தின் பெயர் TOXIC, ஆனால் அந்த படமும் அடுத்த வருடம் தான் ரிலீஸ் ஆகிறது. இப்போது தான் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளனர். நடிகை இயக்குனர் கீது மோகன்தாஸ் படம் இது. நல்ல மூவ்.
மேலும் புதுவருட பிரபு என்பதால் அழகான புகைப்படங்கள் எல்லாம் வந்திருக்கு. அந்த லேட்டஸ்ட் கிளிக்ஸ் தான் இணையத்தில் வைரல். இன்னும் ராக்கி பாய் கெட்டப்பிலேயே இருக்கிறார் யாஷ்.