கடவுள் கொடுத்த பரிசு தேவதை.. பெண் குழந்தை பிறந்திருக்கு யோகி பாபுக்கு. போட்டோ வைரல்.
தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடிய நடிகர் யோகி பாபு. படத்தில் இவருக்கு என்று ஒரு ரோல் இயக்குனர் எழுதிவிட்டால், புடனடியாக சென்று டேட்ஸ் வாங்கிவிடுகின்றனர். காரணம் மனுஷன் அவ்வளவு பிஸி. மதத்திற்கு ஒரு 10 படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால் அதில் இவர் இவர் நடிக்கும் படங்களும் சிலது இருக்கும். அவரோட சினிமா பீக்ல இருக்காரு. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதைப்போல வாய்ப்பு வந்தால் ரிஜெக்ட் செய்யாமல் முடிந்தளவு எல்லா படங்களும் செய்து வருகிறார்.
2020ம் ஆண்டு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் சிறப்பாக திருத்தணி முருகன் கோவிலில் நடந்தது. இவர் மிகப்பெரிய முருக பக்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த விழாவை சினிமா நண்பர்கள் அனைவரையும் அழைத்து பெரியளவில் விழா வைத்து சிறப்பித்தார். தற்போது,
தீபாவளி திருநாளான நேற்று யோகி பாபு வீட்டில் ஒரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அதாவது அவருக்கு கடவுளின் அருளால் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான விஷயம் நேற்று இணையத்தில் பரவிய நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இவருக்கு போன வருடம் தான் ஒரு மகன் பிறந்தான், அந்த குழந்தையை சினிமாத்துறை நண்பர்கள் சென்று பார்த்து வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களை பார்த்தோம்.
இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார்கள் நடிக்கும் படங்களான ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர், விஜய் நடிக்கும் வாரிசு, ஷாருக்கான் நடிக்கும் ஜவான் ஆகிய படங்களில் யோகி பாபு பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.