பவித்ரா, கதிர் ரொமான்ஸ் பார்க்கவே அவ்ளோ செம்மயா இருக்கு. ஒரு வழியா ஹீரோயின் ஆகிட்டாங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Yugi first video song trending

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிச்ச பிரபலங்கள் அடுத்தடுத்து அவங்க வாழ்க்கையில் முன்னேறிட்டே போறாங்க. அவங்களுக்கு வாழ்த்துக்கள். அஸ்வினும் இப்போ சில படங்களில் ஹீரோவா நடிச்சுட்டு இருக்காரு, புகழ் நடிச்ச ஏஜென்ட் கண்ணாயிரம் படம் இந்த வரம் ரிலீஸ் ஆக போகுது, இப்போ பவித்ராவோட டர்ன். பவித்ரா குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிச்சு வெளிய வந்ததில் இருந்தே பிஸி தான். அவங்க சதிஷ் கூட நாய் சேகர் படம் பண்ணினாங்க, இப்போ இந்த படம்.

இந்த படத்தில் கதாநாயகன் கதிர். இந்த படத்தில் இரண்டு பெரிய ஹீரோயின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பவித்ரா தான் கதிருக்கு பேர், இவங்க தான் இந்த படத்தோட கதாநாயகி. இந்த படத்தில் இவங்க சும்மா ஹீரோக்கு ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் சப்போர்ட் பண்ணாமல் மொத்தமாக கதையே இவங்களை வெச்சு தான் நகர்கிறது என்பது போல் ஒரு ரோல். ரொமான்ஸ், கிளாமர் எல்லாம் தாண்டி இப்படி ஒரு ரோல் பண்ணின அவங்களுக்கு இந்த படம் ரொம்ப முக்கியம்.

Yugi first video song trending

என்னால காமெடியும் பண்ண முடியும், ரொமான்சும் பண்ண முடியும் இதுபோல ரொம்ப சீரியசான ரோல் எடுத்தும் தரமாக நடிக முடியும் என்பதை காட்டிருக்காங்க பவித்ரா. கதிருக்கு இந்த படம் ரொம்ப முக்கியம். careerல வளர்ந்து வரும் நடிகர் இவர், ஒரு முறை ஜெயிச்சா ஒத்துக்க மாட்டாங்க, ஒவ்வொரு முறை ஜெயிக்கும் என்று நினைப்பாங்க. இப்போ தான் சூழல் என்று மிகப்பெரிய ஹிட் கைக்கொடுத்தார், இதுவரை தமிழில் வந்த வெப் சீரிஸில் அது தான் பெஸ்ட்டாக அமைந்தது.

இந்த படம் அவரை ஒரு தூக்கு தூக்கி விடும் என்று எதிர்பார்க்கிறோம், காரணம் இந்த கதை ரொம்ப வித்தியாசமான பல லேயர்கள் கொண்ட கதை. ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து கிளைமாக்ஸ் காட்சி வரும். சீட்டின் நுனி வரை அமர்ந்து பார்க்கும் அளவுக்கு திரைக்கதை இருக்கும்.

Video:

Related Posts

View all