கதிர் அடுத்து செம்ம படம் லோடிங்.. பவித்ரா செம்ம மாஸா இருக்காங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இனி நடிகர் கதிர் நடிக்கும் படங்களுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்பார்ப்பு இருக்கு. இப்போது அவர் நடிக்கும் படங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அதனால் அவர் நல்ல தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். அந்த கட்டாயம் அவரை நல்ல படங்களை சூஸ் செய்ய வைத்திருக்கிறது. அந்த வரிசையில் அவர் தேர்தெடுத்து நடித்த படம் தான் யூகி. இந்த படத்தின் ட்ரைலர் தான் தற்போது ரிலீஸ் ஆகியிருக்கிறது.
இந்த படத்தில் நடிப்பு அசுரர்கள் நடித்துள்ளனர். எல்லாருமே சூப்பரா நடிக்கக் கூடியவங்க. கதிர், நரேன், நட்டி, ஆனந்தி, பவித்ரா, ஆத்மீயா. இதுல எல்லாருமே அவங்களோட நடிப்பு திறமையை ப்ரூவ் பண்ணினவங்க. அவங்க கையில் இதுபோன்று ஒரு ஸ்கிரிப்ட் கிடைத்தால் என்ன ஆகும். யூகி என்ற படம் உருவாகும். இந்த ட்ரைலர் இவ்வளவு விறுவிறுப்பாக இருக்கிறது, அப்போது படம் எப்படி இருக்கும். கிளைமாக்ஸ் காட்சி வரை ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் இருக்கும்.
இந்த ட்ரைலர் பார்த்தால் யார் fake பண்றாங்க என்றே தெரியவில்லை. கதிருடைய முகமும் அப்படி இருக்கிறது. பின்பு பவித்ராவுடன் ரொமான்ஸ் செய்கிறார். பவித்ரா மாஸா ஒரு சீனில் வர்ராங்க. நரேன் அவருக்கு backstory வெச்சிருக்காங்க. நட்டி முகத்திலும் ஒரு தேடல், ஒரு பயம். ஆனந்தியை சுற்றி தான் கதையே நடக்கிறது. ஆத்மீயாவும் எதையோ தேடுகிறார். டீசர், ட்ரைலர் compare செய்து பார்த்தால் ஆத்மீயா கூட வில்லியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
சூழல் வெப் சீரிஸ்க்கு பின் இந்த படம் கதிருக்கு ஒரு செம்ம அவுட்டிங்கா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு படம் ஹிட் கொடுத்துவிட்டால் மக்கள் அவர்கள் இடத்தில் இருந்து நிறைய எதிர்பார்ப்பர். அந்த வகையில் இந்த படம் கதிருக்கு ஒரு டெஸ்டா கூட இருக்கலாம். இப்போ இந்த ட்ரைலர் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
Video: