ஆல் ஏரியா நாங்க தான் கிங்! விபேலன்டனில் விஜய்!

விம்பிள்டன் (Wimbledon) என்பது உலகின் பழமையான மற்றும் மிகவும் வரவேற்பேய் பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்றாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஆல் இங்கிலாந்து கிளப் (All England Club) - என்ற இடத்தில் நடக்கும்.
இது 1877 ஆம் ஆண்டு தொடங்கிய விளையாட்டாகும்! இது டென்னிஸ் போட்டிகளில் மிகுந்த வேகமும் சவால்களும் கொண்ட மேடையாகக் கருதப்படுகிறது. தற்போது இந்தியா கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஆன சச்சின் டெண்டுல்கர், பந்த், புஜாரா போன்ற பலர் விம்பிள்டனில் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், விம்பிள்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் தொடர்பான ஒரு ரெஃபரன்ஸ்-ஐ பயன்படுத்தியுள்ளது. அதில், விஜய்யின் அடுத்த படம் ஆன ‘ஜநகனமான’ படத்தின் போஸ்டரை மாற்றியமைத்து, அதில் வரும் “ஜநாயகன்” என்பதற்குப் பதிலாக “விம்பிள்டன் நாயகன்” என சொல்லி பதிவிட்டுள்ளனர்.
இது விஜய் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது மிகவும் பகிரப்படும் போஸ்ட்டராக இந்த போஸ்டர் உள்ளது.