கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் ஜூலன் கோஸ்வாமி. இந்திய மகளிர் கிரிக்கெட்டின் இரும்பு பெண்மணி..!
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் இரும்பு பெண்மணி ஜூலன் கோஸ்வாமி. ஜூலன் கோஸ்வாமி, கடினமான நேரத்தில் என்னை ஆதரித்தவர் என்று இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளார். இவரை ரசிகர்கள் செல்லமாக ‘சக்தா எக்ஸ்பிரஸ்’ என்று அழைப்பர்.
20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக ஆடிய ஜூலான் கோஸ்வாமி இந்த போட்டியுடன் ஓய்வு பெற்றார். அவருக்கு மறக்கமுடியாத தொடராக அமைந்திருக்கும்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜூலன் கோஸ்வாமி அவருடைய 20 வருட கிரிக்கெட் வாழ்கையை இங்கிலாந்து மண்ணில், கிரிக்கெட்டின் கோவிலாக கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நிறைவு செய்தது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். அவரின் கடைசி போட்டியில் மிகவும் பிரமாதமாக பௌலிங் செய்து 2 விக்கெட் வீழ்த்தினார். 10 ஓவர்களை வீசிய அவர் வெறும் 30 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதில் மூன்று மெய்டன் ஓவர்கள் அடங்கும்.
அவருடைய 20 வருட கிரிக்கெட் பயணத்தில் 10 ஆயிரம் பந்துகளுக்கு மேல் வீசியுள்ள கோஸ்வாமி, சர்வதேச ODI போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் பெண் என்ற சாதனையை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல பல சாதனைகளை நிகழ்த்தியவர் இவர்.
19 வருடங்கள், 262 நாட்கள் இந்திய மகளிர் அணிக்காக விளையாடியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளை நிகழ்த்தியவர் இவர். அதில் சில: -அதிக LBW விக்கெட்டுகள் எடுத்த முதல் வீராங்கனை. -ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இளம் வீராங்கனை இவர் ஆவர். -அதிக எண்ணிக்கையிலான எதிரணி பேட்டர்களை 0 ரன்னில் வெளியேற்றிய முதல் பந்துவீச்சாளர் இவர்.
என்ற பல பெருமைகள் கோஸ்வாமியே சேரும். இவரை கண்டிப்பாக இந்திய அணி மிஸ் செய்யும்.