CSK வில் இருந்து விலகிய ஜடேஜா! புது இரண்டு இந்தியா ஆல்ரவுண்டர்களை விலைக்கு வாங்கிய CSK யாரு என்று தெரியுமா?
ஐபிஎல் 2023 தொடருக்கான பணிகள் ஆரம்பித்துவிட்டன. 10 ஐபிஎல் அணிகளும் இன்னும் 20 நாட்களுக்குள் தங்கள் அணியில் இருந்து விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வழங்க வேண்டும். கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் டி20 உலகக்கோப்பையில் தீவிர கவனத்தை செலுத்தி வரும் நேரத்தில் ஐபிஎல் தொடர் குறித்து பிசிசிஐ மெகா அப்டேட்டை கொடுத்திருக்கிறது. அதாவது 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 16ம் தேதியன்று நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள்ளாக சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது இருந்தே அனைத்து அணிகளிலும் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனது முதல்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ்… அதாவது, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணியில் ரிசர்வ் பிளேயராக இடம்பிடித்திருக்கும் ஷர்துல் தாக்கூர், ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவரை இந்த முறை ஏலத்துக்காக அணியில் இருந்து விடுவிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் ஷர்துல் தாக்கூர் சி.எஸ்.கே விற்கு வருவாரா என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ள தொடருக்கு முன்னதாக தற்போது ஐபிஎல் வீரர்களின் ஏலம் துவங்க பபிஸிஐ அறிவித்திருக்கிறது. சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை இந்த ஏலத்தில் தேர்வு செய்யும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
ஏனெனில் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்ற அணியாகவும், நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய அணியாகவும் உள்ள சிஎஸ்கே அணியானது இம்முறை எந்தெந்த வீரர்களின் மீது தங்களது கவனத்தை செலுத்துகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.
10.75 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வாங்கப்பட்ட ஷர்துல் தாக்கூர், அவ்வளவு தொகைக்கு உரிய ஆட்டத்தை விளையாடவில்லை. அவர் கடந்த சீசனில் மிகவும் மோசமான ரன்ரேட்டைகொண்டிருக்கிறார். அவர் மீது அந்த அணி பெரிய எதிர்பார்ப்பை வைத்து ஐபிஎல் ஏலத்தில் வாங்கியபோதும், ஏமாற்றத்தையே சந்திக்க வேண்டியிருந்தது.
இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஷல்துர் தாக்கூரை விடுவிக்க முடிவு செய்திருக்கிறது. அவரை சி.ஸ். கே வாங்க முடிவு செய்திருப்பதாகவும் அதோடு சேர்த்து அக்சர் பட்டேலையும் சி.எஸ்.கே தேர்வு செய்திருப்பதாகவும் தகவல்கள் கசிகிறது.
ஜடேஜாவிற்கு பதிலாக டெல்லி கேப்பிடல்ஸில் இருந்து ஷர்துல் தாக்கூர் மற்றும் அக்சர் பட்டேலை CSK டிரேட் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.