தலைகீழாக மாறுகிறது வேர்ல்ட் கப். நமீபியா, ஸ்காட்லாந்து அணிகளின் ஆபாரவெற்றி!! அனுபவமிக்க அணிகளை வீழ்த்தி அசத்தல்
… நேற்றைய தகுதிச்சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் நமீபியாவிடம் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது மற்றும் மற்றும் இன்று நடந்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஸ்காட்லாந்து வீழ்த்தியது. 8-வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. சூப்பர் 12 சுற்றுக்கு 8 அணிகள் நேரடியாக தகுதிபெற்ற நிலையில், எஞ்சிய 4 அணிகளை தீர்மானிக்கும் தகுதிப்போட்டிகள். தகுதிச் சுற்றுப்போட்டியின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை, நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தீர்மானித்தது. அதன்படி களம் கண்ட நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை சேர்த்தது. அதில், பிரைலின்க் 28 பந்துகளில் 44 ரன்களும், ஜே.ஜே.ஸ்மித் அவுட் ஆகாமல் 16 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணி, நமீபிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் தொடக்க வீரர் நிசங்கா 9 ரன்னுக்கும், மெண்டீஸ் 6 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக கேப்டன் தசுன் ஷனகா 29 ரன்னும், பானுகா ராஜபக்சே 20 ரன்னும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுடன் பெவிலியன் திரும்பினர்.
அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 19 ஓவர் முடிவில் 108 ரன்களுடன் தோல்வியடைந்தது. நமீபியா அணி தரப்பில் டேவிட் வைஸ், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ்,பென் ஷிகோங்கோ,ஜான் ப்ரைலின்க் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இந்நிலையில், இன்றைய போட்டியில் ஸ்காட்லாந்திடம் 42 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து இடையேயான தகுதிப்போட்டி ஹோபர்ட்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கத்திய தீவுகள் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியில் ஓபனர் முன்சே நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தார். அடுத்து மைக்கேல் ஜோன்ஸ், மெக் லியாட், கிறிஸ் க்ரீவ்ஸ் ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 160/5 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மொத்தம் 7 பேர் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே அடித்தார்கள். கைல் மேய்ர்ஸ், லிவிஸ், ஆகிய ஒருசிலர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை அடித்தனர்.
இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணி 18.3 ஓவர்களில் 118/10 ரன்களை மட்டும் சேர்த்து, 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.