அதிமுக ஆட்சியில் அரசுக்கு ₹68.51 கோடி இழப்பு!
2017-21 ஆண்டுகளில் அரசு தன்னிடம் உள்ள தரவுகளை ஏற்காமல் இலவச லேப்டாப், காலணிகள், பள்ளி பைகள் வழங்கும் திட்டத்தை கவனக்குறைவாக செயல்படுத்தியதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இந்த பொருட்கள் வழங்குவதில் தாமதம், வீண் செலவுகள் மற்றும் தேவையற்ற நிதி முடக்கம் ஏற்பட்டுள்ளன
- சி.ஏ.ஜி அறிக்கை
2017-18ம் ஆண்டில் போட்டித் தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்க 60,000 லேப்டாப்கள் வாங்கப்பட்டு, 8079 லேப்டாப்கள் மட்டுமே வழங்கப்பட்டது;
மீதமுள்ள லேப்டாப்களை வழங்க நடவடிக்கை எடுக்காததால் அதன் பேட்டரி உத்தரவாதம் காலாவதி ஆகி அரசுக்கு ₹68.71 கோடி தேவையற்ற செலவு ஏற்பட்டுள்ளது
- சி.ஏ.ஜி எனும் கணக்குத் தணிக்கை அறிக்கையில் தகவல்
2019-20 ஆண்டுகளில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலணிகளில், 3.46 லட்சம் காலணிகள் துறையின் கிடப்பிலேயே கிடந்ததால் ₹5.47 கோடி வீண் - சி.ஏ.ஜி அறிக்கை
2017-18ம் ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 2.32 லட்சம் மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடிப்பதற்கு முன்பாக இலவச லேப்டாப்களை பெறவில்லை - சி.ஏ.ஜி அறிக்கை.
2016-21ம் ஆண்டுகளில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 5.09 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2.80 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன; இதனால் ₹1,515 கோடி நிதியை தமிழ்நாடு அரசு பெற முடியவில்லை
தவறான பயனாளிகளை சேர்த்தல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகளை சேர்ப்பதில் பற்றாக்குறை, வீடுகள் ஒதுக்குவதில் முறைகேடு ஆகியவை சி.ஏ.ஜி. கணக்கு தணிக்கையில் தெரியவந்துள்ளது