LIVE UPDATES: ஓபிஎஸ்க்கு எதிராக உறுப்பினர்கள் கோஷமிடுவதால் பரபரப்பு.. அண்ணன் ஓபிஎஸ் என பேசிய இபிஎஸ்..
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது: ஒரேமேடையில் ஓபிஎஸ், ஈபிஎஸ்..!!
ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி தேர்வாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நீதிமன்ற தடையுள்ளதால், கோபத்தை ஓ.பி.எஸ் மீது அனைவரும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு பன்னீர்செலவம் முன்மொழிந்தார்!
பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்!
அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு. ஓபிஎஸ்-க்கு எதிராகவும், ஈபிஎஸ்-க்கு ஆதரவாகவும் பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷம்.
2190 பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கை குறித்து விவாதிக்க வேண்டும்
இரட்டை தலைமையால் செயல்பட முடியவில்லை- ஒருங்கிணைப்பு இல்லை. ஒற்றைத்தலைமைக்கு ஆதரவளித்தால் தான் மட்டுமே மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
-முன்னாள் அமைச்சர் சண்முகம்
பொதுக்குழு தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்து விட்டனர்: துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவிப்பு.
எடப்பாடி பழனிசாமி விரைவில் பொதுச்செயலாளர் ஆவார்- பொள்ளாச்சி ஜெயராமன்.
வரும் 11.07.2022 அன்று காலை 9.15 மணிக்கு மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும : அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பு.