LIVE UPDATES: பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி. தலைமை அலுவலகத்தை கைப்பற்றிய பன்னீர்செல்வம்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வந்தடைந்தார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு!
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு. ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் வந்தடைந்தார் ஈபிஎஸ். எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட உள்ள முக்கிய முடிவுகளின் விபரங்கள்.
9:15 AM
வன்முறை, கலவரத்துக்கு இடையே அதிமுக தலைமை அலுவலகம் சென்றார் ஓ.பன்னீர்செல்வம்.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள், பூட்டை உடைத்து அதிமுக அலுவலகத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு.