இரட்டை தலைமையில் ஆளுக்கொரு கருத்து இருக்கும், அப்போது ஒரு முடிவெடுக்க பல்வேறு தடுமாற்றங்கள் இருக்கும். இ.பி.எஸ். தரப்பு வாதம்!!
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து, அண்ணாவையும், திராவிடத்தையும் எடுத்துவிடலாம். திரு.எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவுக்கு மொத்தமாக அடமானம் வைத்துவிட்டார் என்று காங்கிரஸ் MP ஜோதிமணி விமர்சனம். ஆளுநர் உரை வெற்று உரையாக இருந்தது. ஆளுநரை அமர வைத்துக்கொண்டு முதலமைச்சர் பேசுவது மரபுக்கு எதிரானது எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
--
அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் தொடங்கியது!
ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை உருவாக்கிய போது என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டதோ, அதுதான் தற்போது பின்பற்றப்பட்டது
ஆனால், முன்னர் எதிர்ப்பு தெரிவிக்காத ஓ.பி.எஸ்., தற்போது ஒற்றைத்தலைமை குறித்து தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என கூறுகிறார். ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் அதிமுக கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதும் அடிப்படை தொண்டர்களால் அல்ல, மாறாக பொதுக்குழு உறுப்பினர்களால்தான்.
இரட்டை தலைமையில் ஆளுக்கொரு கருத்து இருக்கும், அப்போது ஒரு முடிவெடுக்க பல்வேறு தடுமாற்றங்கள் இருக்கும் அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
எனவேதான் கட்சியை வழிநடத்தவும், முடிவெடுக்கவும் ஒற்றைத் தலைமை என முடிவு எடுக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் அதிமுக கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதும் அடிப்படை தொண்டர்களால் அல்ல மாறாக பொதுக்குழு உறுப்பினர்களால் தான்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அதனை ரத்து செய்வதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. பொதுக்குழுவுக்கு கட்சியின் விதிகளை கட்டமைக்கவும், அமல்படுத்தவும் முழு அதிகாரம் உண்டு;
அப்படி இருக்கும்போது ஓ.பி.எஸ் தரப்பு அடிப்படை உறுப்பினர்களை கூட்ட வேண்டும் என்று ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்?
ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் பங்கேற்ற 2,460 உறுப்பினர்கள் கலந்தகொண்டு பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக அங்கீகரித்தனர், இது 94.5% ஆதரவு ஆகும். எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் நிறைவடைந்த்தை அடுத்து, வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. -இ.பி.எஸ். தரப்பு வாதம்