அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் இருந்து 3 வழக்குகள்!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் தனித்தனியே மனுத் தாக்கல்!
பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கோரிவிட்டு மாலையிலேயே சட்டவிரோதமாகப் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதாக புகார்!
இது நீதிமன்ற நடவடிக்கையை மீறும் செயல் மட்டுமல்லாமல், நீதிமன்றத்தின் கண்ணியத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் செயல் - ஓபிஎஸ் தரப்பு.
கட்சி விதிகளை திருத்த பொதுக்குழுவிற்கு அதிகாரம் இருந்தாலும், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு ஒபிஸ் தரப்பு மனோஜ் பாண்டியன் மனு மீது விசாரணை.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முதல் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவு..
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்
மேலும் 37 பேர் ஈபிஎஸ் பெயரில் விருப்பமனுக்களை தாக்கல் செய்தனர்.
சோதனைகள்,வேதனைகளை எதிர்கொண்டு நெருப்பாற்றில் நீந்திக் கொண்டிருக்கிறார் பழனிசாமி! - ஆர்.பி.உதயகுமார்.